• Nov 14 2024

உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் திரை விமர்சனம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் அருண் காமராஜ் இயக்கத்தில் இன்றைய தினம் வெளியாகியிருந்த திரைப்படம் தான் நெஞ்சுக்கு நீதி. இப்படத்தை போனி கபூர் மற்றும் ஷு ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிந்தியில் வெளிவந்த ஆர்டிகிள் 15 படத்தின் ரீமேக் இப்படம் என்றாலும், படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த வகையில் படத்தின் கதைக்களமாவது
நேர்மையாக இருக்கும் ASP விஜயராகவன் { உதயநிதி ஸ்டாலின் } பணிமாற்றம் செய்யப்பட்டு பொள்ளாச்சிக்கு வருகிறார். அவர் பணியேற்ற சில நாட்களில், அங்கு மூன்று சிறுமிகள் காணாமல் போகிறார்கள். அதில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்பட்டு ஊரின் நடுவே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கவிட படுகிறார்கள்.இந்த வழக்கை விசாரணை செய்யும் உதயநிதி ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து பல அதிர்ச்சியளிக்கும் விஷயங்கள் தெரியவருகிறது. இரண்டு சிறுமிகளையும் கற்பழித்து கொலை செய்துள்ளார்கள் என்று கண்டுபிடிக்கிறார். ஆனால், அவரை சுற்றி இருக்கும் சில காக்கி சட்டையும், சில கரை வேட்டியும் இந்த வழக்கை நேர்வழியில் உதயநிதியை நடத்தவிடாமல், முடிவுக்கு கொண்டுவர சூழ்ச்சி செய்கிறார்கள்.

இவர்கள் செய்யும் சூழ்ச்சியில் இருந்த தப்பித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வாங்கி கொடுத்தாரா உதயநிதி? அந்த மூன்றாவது சிறுமிக்கு என்ன ஆனது ? இறுதியில் சட்டம் நீதியின் பக்கம் நின்றதா? என்பதே படத்தின் மீதி கதை.

மேலும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த உதயநிதி தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். சட்டத்தை கடைபிடிக்கும் விதம், பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் தன்மை, அனைவரும் சமம் பேசும் வசனங்கள் என அனைத்தையும் சிறப்பாக செய்துள்ளார்.

இவரைப்போல கதாநாயகியாக வரும் தான்யா, குறைந்த காட்சியில் வந்தாலும் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் தங்களை தாழ்த்த நினைக்கும் அதிகாரவர்கத்தை எதிர்த்து போராடும் ஆரி ஆகியோரின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது.

நடிகர் இளவரசு, மயில்சாமி ஷிவானி ராஜசேகர் அப்துல் அலி, ராட்சசன் சரவணன், ரமேஷ் திலக், சாயாஜி சிண்டே ஆகியோரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.

இயக்குநர் அருண் ராஜா காமராஜ், இப்படத்தின் மூலம் சிந்திக்க வைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு தனித்து நிற்கிறது. திபு நினன் தாமஸ் இசை படத்திற்கு பலம். மொத்தத்தில் அனைவரும் சமம் என்ற நீதியை இந்தத் திரைப்படம் வழங்கியுள்ளது.

https://www.youtube.com/embed/ccuEHJesbKM

சமூக ஊடகங்களில்:

  1. Facebook : சினிசமூகம் முகநூல்
  2. Twitter: சினிசமூகம் ட்விட்டர்
  3. Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement