லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று ரிலீஸானது. பான் இந்தியா படமாக வெளியான லியோவுக்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. அதேநேரம் லியோவில் பல சொதப்பல்கள் இருப்பதாகவும் ட்ரோல்கள் வைரலாகி வருகின்றன. எனவே இப்படம் எப்படி இருக்கு என்று வாங்க பார்க்கலாம்.
கதைக் களம்
சகோதரர்களான ஆண்டனி தாஸ்(சஞ்சய் தத்), ஹரால்டு தாஸ்(அர்ஜுன்) ஆகியோர் சட்டவிரோதமாக போதைப் பொருள் வியாபாரம் செய்து வருவார்கள். ஆனால் உலகை பொருத்தவரை அவர்கள் புகையிலை வியாபாரிகள். ஆண்டனி தாஸின் மகன் லியோ(விஜய் )தான் போதைப் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வார். புகையிலை ஃபேக்டரியில் ஏற்படும் தீ விபத்தில் லியோ இறந்துவிடுவார்.
இந்த சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் கழித்து இமாச்சல பிரதேசத்தில் மனைவி சத்யா(த்ரிஷா), இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வரும் பார்த்திபன்(விஜய்) குறித்து தாஸ் சகோதரர்களுக்கு தெரிய வரும்.
பார்த்திபனின் புகைப்படத்தை பார்த்த தாஸ் சகோதரர்களோ லியோ சாகவில்லை என்று முடிவு செய்வார்கள். லியோ தான் பார்த்திபனா, இல்லை ஒரே மாதிரி இருக்கும் இரண்டு பேரை தவறாக புரிந்து கொள்கிறார்களா,பார்த்திபனாக வாழ்ந்து வரும் இவருக்கும், லியோவிற்கும் என்ன சம்பந்தம்? இவர் பார்த்திபனாக நடித்து ஊரையும் உலகையும் ஏமாற்றுகிறாரா? ஏன் தாஸ் & Co லியோவை கொள்ள முயற்சி செய்கிறார்கள்? இதன் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதி கதை.
படம் பற்றிய அலசல்
இதுவரை நடித்திராத கதாப்பாத்திரத்தில் நடித்து விஜய் அசத்தியுள்ளார்.விஜய்யின் ஒன் மேன் ஷோவாக இருக்கிறது. லியோ மற்றும் பார்த்திபனாக சிறப்பாக நடித்திருக்கிறார்.லியோ தாஸாக ஒரு Badass ஆக வித்தியாசமாக மிரட்டியிருக்கிறார். அதே போல தந்தை, கணவராகவும் சிறப்பாக நடித்திருக்கின்றார்.கிளைமாக்ஸ் காட்சி வரை விஜய்யின் ஒன் மேன் ஷோவாக இருக்கிறது.
மேலும் இவருடன் இணைந்து நடித்த த்ரிஷாவின் நடிப்பும் சூப்பர். அவரின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக இருக்கிறது. விஜய்க்கும், திரிஷாவுக்கும் இடையே நடக்கும் எமோஷனல் காட்சியெல்லாம் வேற லெவல்.வில்லன்களாக மிரட்டியிருக்கும் அர்ஜுன் தாஸ், அர்ஜுன், சாண்டி மாஸ்டர் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
இவர்களோடு மேத்யூ தாமஸ், மடோனா சபாஸ்டியன், மன்சூர் அலி கான், இயல், ஜார்ஜ் மரியம், சாண்டி மாஸ்டர், ஜனனி ஆகியோரும் சிறப்பதக நடித்திருக்கின்றனர்.குறிப்பாக Hyena-வை வைத்து உருவாக்கிய காட்சி, கொஞ்சம் கூட அது VFX இல்லை என்பது போல் வடிவமைத்த விதம் செம மாஸாக உள்ளது.
அதே போல் சண்டை காட்சிகளை வடிவமைத்த விதமும் சூப்பர்.விஜய்யின் டைட்டில் கார்டு, இடைவேளை, கிளைமாக்ஸ் LCU கனெக்ட் செய்த விதம் என திரையரங்கை தன்னுடைய இயக்கத்தால் தெறிக்க விட்டு விட்டுள்ளார் லோகேஷ் அத்தோடு இசையமைப்பாளரான அனிருத் தன்னுடைய இசையில் மிரளச் செய்துள்ளார்.மொத்தத்தில் லியோ ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட சூப்பராக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!