• Nov 14 2024

சபரிமலை பயணத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட “மாளிகப்புரம்” படத்தன் திரை விமர்சனம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கடவுளுக்கும் பக்தைக்கும் இடையே உள்ள ஒரு அன்பை மிகவும் அருமையாக சொல்லியிருக்கும் திரைப்படம் மாளிகப்புரம். இப்படம் நெட்ட பின்டோ தயாரிப்பில் இயக்குநர் விஷினு சசி சங்கர்  இயக்கி உள்ளார். இப்படத்தில் உன்னி முகிந்தன் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்.

அத்தோடு தேவா நந்தன், ஸ்ரீபாத், செஞ்சு குரூப், மனோஜ் கே ஜெயன் என பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கின்றனர். மலையாள மொழியில் உருவாக்கி இருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.


கேரளாவில் உள்ள ஒரு சிறிய ஊரில் அப்பா, அம்மா, பாட்டி என குடும்பமாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இதில் தேவானந்தா பாட்டி சொன்ன கதைகளை கேட்டு வளர்ந்து வரும் சிறுமி கல்யாணி சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க வேண்டுமென்று ஆர்வமாக இருக்கிறார். இதனால் தந்தை சிறுமி கல்யாணிக்கு மாலை போட்டு விடுகிறார் அவரது அப்பா. 

அத்தோடு இப்படிப்பட்ட நிலையில் தான் சிறுமியின் அப்பா கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் தன்னுடைய அப்பா ஐயப்பனிடம் சென்று விட்டதாக கருதி யாருக்கும் தெரியாமல் தன்னுடைய சபரிமலைக்கு செல்வதாக நண்பருடன் மும்பைக்கு பஸ் ஏற்கிறார்.


இந்த சூழ்நிலையில் தான் சிறுமிகளை கடத்தி செல்லும் மாயி சிறுமி கல்யாணியின் மேல் கண் வைக்கிறான். இவ்வாறுஇருக்கையில்  தீடிரென வரும் இளைஞர் அந்த சிறுமியை கடத்தல் கும்பலிடம் இருந்து காப்பாற்றி ஐயப்பனை தரிசனம் செய்ய வைக்கிறார். உண்மையில் அந்த இளைஞன் யார்? சிறுமி ஐயப்பனை சந்தித்தாரா? மீண்டும் அவருடைய குடும்பத்துடன் சேர்ந்தாரா என்பதுதான் கதை.

இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் கடவுள் நேரடியாக வந்துதான் உதவ வேண்டும் என்ற அவசியம் இல்லை மனித ரூபத்திலும் வரலாம் என்ற கருத்தை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். சிறுமி கல்யாணியின் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. அத்தோடு பெரிய நடிகைகளுக்கு இணயான நடிப்பை கொடுத்து அடுத்த படத்திற்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளார். ஒரு படத்திற்கு வில்லன் என்பவன் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும் அந்த வகையில் சம்பத்ராம் பார்வையாளர்களுக்கு பயத்தை வரவழைக்கும் வகையில் நடித்துள்ளார்.


இப் படத்தின் தொடக்க காட்சிகளில் படம் மெதுவாக நகர்ந்தாலும் பின்னர் வேகம் எடுக்கிறது. சம்பத்ராமின் வில்லத்தனத்தையும், குழந்தையை தேடும் பெற்றோர்களின் காட்சிகளையும் இன்னமும் கொஞ்சம் எடுத்திருக்கலாம். இப்படத்தில் ஒளிப்பதிவு சபரிமலை பயணத்திற்கு செல்லும் உணர்வை தருகிறது. அத்தோடு கதைக்கு தேவையான இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ரஞ்சன் ராஜா. கதைக்களம் சரியாக செல்கிறது, ஒரு கடவுள் பக்தி படத்தை இப்படியும் எடுக்கலாம் என்று வெற்றிகரமான படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் விஷ்னு சசி சங்கர்.

மொத்தத்தில் இப்படம் ஐயப்ப பக்த்தராக இல்லாமல் இருந்தாலும் குடும்பமாக சென்று பார்க்கக்கூடிய தரமான படமாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement