தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் தான் இசையமைப்பாளர் டி இமான் .
இவர் இறுதியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இதனைத் தொடர்ந்தும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்.
இவர் கடந்த 2008ம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது .
சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் மீது டி இமான் வழக்குப்பதிவு செய்துள்ளார். தனது குழந்தைகளின் ஒரிஜினல் பாஸ்போர்ட் தன்னிடம் இருக்கும் நிலையில் அதனை மறைத்துவிட்டு தனது முன்னாள் மனைவி மோனிகா குழந்தைகளுக்கு புதிய பாஸ்போர்ட்டை பெற்றுள்ளார் என்று அந்த மனுவில் கூறி இருந்தது பரபரப்பைக் கிளப்பியது.
இதன்பின், இவர் மீண்டும் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக சில மாதங்களுக்கு முன் கூறப்பட்டது.
இந்நிலையில், வருகிற 15ஆம் தேதி டி.இமான் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் கசிந்தது.
ஆனால், தனது இரண்டாம் திருமணம் குறித்து டி. இமான் இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!