தமிழ் சினிமாவில் காந்தக் கண்ணழகி என்ற பட்டத்தோடு 90களில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் மீனா. இவர் ரஜினி, கமல், அஜித் எனப் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கின்றார்.
இவர் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவ்வாறு இவர் கெரியரில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் வேளை இவரது கணவரான வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக திடீரென இறப்புக்குள்ளானார். இவரது இறப்பிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
இதனை அடுத்து மீனாவை ஆறுதல்படுத்தும் முகமாக அவரது தோழிகள் அடிக்கடி அவரை சந்தித்து வருகின்றனர்.அண்மையில் மீனாவின் பிறந்தநாளை எல்லாம் சிறப்பாகக் கொண்டாடி இருந்தனர்.இதன் பிறகு இப்போது ஓர் ரீல் வீடியோ செய்து வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!