• Nov 10 2024

விஜய்யின் 'யூத்' பட நாயகியா இவங்க..? இப்போ எப்படி மாறீட்டாங்க பாருங்க..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவரின் நடிப்பிற்கும், நகைச்சுவைத் தன்மை நிறைந்த பேச்சுக்கும், அமைதியான சுபாவத்திற்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அடிமை. இதுவரைக்கும் இவரின் நடிப்பில் 65 இற்கு அதிகமான படங்கள் உருவாகி இருக்கின்றன. 


விஜய்யுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என நடிகைகள் மட்டும்மல்லாமல் குணச்சித்திர நடிகர்களும் ஏங்குவது வழமை. இவரின் நடிப்பில் உருவான படங்களில் மறக்க முடியாத ஒரு படம் என்றால் அது 'யூத்'.


இப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை ஷாஹீன் கான். தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாகவே இவர் ஏனைய மொழி படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் அவரின் நடிப்பில் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் கடந்த 2002 -ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் 'யூத்'. இப்படமானது அந்தக் கலயத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு வசூல் சாதனையையும் படைத்தது. 


இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஷாஹீன் கான் ‘சந்தியா’ என்ற கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார். படங்களில் நடிப்பதற்கு முன்பாக மாடலிங் துறை மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் ஷாஹீன் கான். 

அனைத் தொடர்ந்து ‘ஃபேரன் லவ்லி’ விளம்பரத்தில் நடித்து இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானார். இது அவருக்கு பட வாய்ப்புகளை பெற்று தந்தது. இதன் மூலம்  ஷாஹீன் கான் முதன்முதலாக தெலுங்கில் வெளிவந்த ‘நவ் தவலு’ என்ற படத்தில் தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.

அவற்றை தொடர்ந்து தான் இவர் தமிழில் முன்னர் கூறியது போன்று 'யூத்' படத்தில் நடித்தார். எனினும் தமிழில் இதுவரை அவர் 'யூத்' ஒன்றில் மட்டுமே நடித்து இருக்கின்றார். அதற்குப் பின் தமிழில் வாய்ப்புகள் வந்தும் அவர் அவற்றை ஏற்கவில்லை.  


அதன்பின்பு அவர்  மும்பையைச் சேர்ந்த தக்வீம் ஹாசன் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார். இத்தம்பதிகளுக்கு ஆலம் கான் என்ற ஒரு குழந்தை உள்ளது. இக்குழந்தையும் தற்போது நன்றாக வளர்ந்து விட்டது.


இந்நிலையில் நடிகை ஷாஹீன் கானின் குடும்பப் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் "அடடே யூத் படத்தில் நடித்த நடிகையா இவர், என்ன இப்படி மாறி விட்டார்" என கேட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement