• Nov 14 2024

சேலை கலாச்சாரம் பற்றி கீர்த்தி சுரேஷ் என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரைப்ப நடிகர்களில் கீர்த்தி சுரேஷ் மிகவும் பிரபலமானவர். இவர் தனது அழகினாலும் நடிப்பினாலும் இளம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இளசுகளின் கனவு நாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் பெண்களை முன்னுரிமைப்படுத்தும்  கதைகளை காெண்ட படங்களை  தெரிவு செய்து நடித்து வருகின்றார்.


சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் கோவையில் ஒரு துணி கடையை திறந்துவைத்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், கோவையில் முதன்முறையாக கடை திறப்பு விழாவுக்கு வந்து இருக்கிறேன். இது எனக்கு மகிழ்சியை அளிக்கின்றது என கூறியிருந்தார்.


மேலும் திறப்பு விழாவுக்கு வரும் போது அதிகளவு சேலையை வாங்குவேன். என்னிடம் பெரிதாக சேலைகள் இல்லை அம்மாவிடம் நிறைய புடவை இருக்கின்றது. சில சமயங்களில் அம்மாவிடம் இருந்து சேலை திருடியும் இருக்கிறேன். தற்போதைய கால கட்டத்தில் கைத்தறி சேலைகளின் புடவை மதிப்பு குறைந்துவிட்டது. நம்முடைய கலாச்சாரம் அழிவதை நிறுத்த வேண்டும், எங்களின் கலாச்சார  உடுப்பு புடவை தான்  என்று கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார் இந்த வீடியோ இணையத்தில்்தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement