விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’எல்ஐசி’ என்ற ’லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற திரைப்படத்தில் சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இணைந்தார் என்ற செய்தியை பார்த்தோம். அவர் இந்த படத்தின் நாயகனான பிரதிப் ரங்கநாதன் தந்தையாக நடித்து வருகிறார் என்பதும் அவர் இயற்கை விவசாயம் குறித்த சில கருத்துக்களை கூறும் வகையில் அவரது கேரக்டர் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
பிரதீப் ரங்கநாதன் மற்றும் சீமான் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள், பிரச்சனைகள், சமூக அக்கறையுடன் இருவரும் ஒரு விஷயத்தை எப்படி அணுகுகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்பட்டது.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவை அருகே உள்ள ஈஷா தியான மையத்தில் நடந்த நிலையில் சீமான் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பதும் அது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகியது.
இந்த நிலையில் சீமான் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றும் வகையில் 10 நாட்கள் மட்டுமே அவரிடம் கால்ஷீட் பெற்றதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவரது கேரக்டர் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே கூடுதலாக 20 நாட்கள் கால்ஷீட் வேண்டும் என்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கேட்டதாக தெரிகிறது.
ஆனால் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் தான் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டி இருப்பதால் தன்னால் கால்ஷீட் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை என்று சீமான் கூறியதாகவும் இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தன்னுடைய கேரக்டரை விக்னேஷ் சிவன் சிறப்பான முறையில் செதுக்கி இருப்பதால் கூடுதலாக 20 நாட்கள் அவர் கால்ஷீட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!