• Nov 10 2024

நடிகர் சித்தார்த் விவகாரம் தொடர்பில் கொதித்தெழுந்த சீமான்... "சித்தார்த் காவேரி தண்ணி கேட்கவில்லை ஆனால்......."

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சித்தார்த் நடித்த "சித்தா "  படத்தின் பிரெஸ் மீட் நேற்று கர்நாடகாவில் நடந்த நிலையில், அந்த நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குள்ளேயே போராட்டக்காரர்கள் நுழைந்து தமிழ் நடிகர் இங்கே பேச கூடாது என எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தொடர்பில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஊடகவியாளர்களுக்கு கருத்துதெரிவித்துள்ளார். 



நடிகர் சித்தார்த் கடந்த 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஹீரோ, கெஸ்ட் ரோல் என பலவிதமான கேரக்டர்களில் நடித்துள்ளார். ஆனாலும், இதுவரை அவரது கேரியரில் பெஸ்ட் திரைப்படம் என எதுவும் இல்லாமல் இருந்தது.  தற்போது அந்த குறையை சித்தா திரைப்படம் சரி செய்துள்ளது. 



அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள சித்தா திரைப்படம், செப்டெம்பர் 28-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இன்றைய சமூகத்தில் அதிகமாக நடந்துவரும் Child Abuse பற்றி பக்குவமாக விவரிக்கிறது இந்தப் படம். இதனால் சித்தார்த்திற்கும் நல்ல பாராட்டுக் கிடைத்து வருகின்றது.


இப்படியான நிலையில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட கூடாது என கர்நாடகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது . நடிகர் சித்தார்த் நடித்து உள்ள சித்தா படத்தின் பிரெஸ் மீட் நேற்று கர்நாடகாவில் நடந்த நிலையில், அந்த நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குள்ளேயே போராட்டக்காரர்கள் நுழைந்து தமிழ் நடிகர் இங்கே பேச கூடாது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சித்தார்த் அங்கிருந்து பாதியில் கிளம்பி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 



இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஊடகவியாளர்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் யாஷ் நடித்து kgf படம் பாகம் 2 வரை வந்துள்ளது. நாம் எந்த இடையூறும் செய்வது  இல்லை ஆனால் அவர்கள் நடிகர் விஜய் மற்றும் நடிகர்கள் படத்தினை திரையிட விடுவதில்லை, சித்தார்த் ஒரு கலைஞன் அவருக்கும் தண்ணி பிரச்சினைக்கும் சம்மந்தம் இல்லை, அவர் காவேரி தண்ணியை விடுங்கள் என்று கேட்டதும் இல்லை ,அது அரசியல் , தலைவர்களிடையில் பேசி தீர்வுகான வேண்டும்.


அதை விடுத்து ஒரு நடிகரை கேள்வி கேட்பது எப்படி அந்த அரங்கத்தில் காவலர்கள் பாதுகாப்பிற்கு இருந்தார்களா?  இல்லையா? ஏன் சத்தம் போடுபவர்களை அப்புறப்படுத்தவில்லைல் ?, இந்தமாநிலத்தில் அப்டி செய்தால் காவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் , அவர்கள் ஏன் எடுக்கவில்லை?, வேறு மாநிலங்களில் உள்ள படங்களை ஆதரிப்பவர்கள் இந்தமானிலத்தின் படங்களை ஏன் ஆதரிக்கவில்லை என்று சித்தார்த் விவகாரத்தில் கொதித்தெழுந்த சீமான் இவ்வாறு பல கேள்விகளை எழுப்பி தனது கருத்தை கூறியுள்ளார். 

Advertisement

Advertisement