• Sep 20 2024

நடிகை நமீதாவுக்கு சிறப்பாக நடந்த சீமந்த நிகழ்வு- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் நமீதா. இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

அந்த வகையில் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பம்பரக்கண்ணாலே, இங்கிலிஸ்காரன், பாண்டி, பில்லா, அழகிய தமிழ் மகன் என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தொடர்ந்தும் சரியான படவாய்ப்புகள் அமையாததால் சின்னத்திரையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். மானாட மயிலாட, டான்ஸ் வோசஸ் டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்தார். இது தவிர பிக்பாஸ் சீசன் 1 இலும் போட்டியாராகப் பங்கு கொண்டார்.

பின்பு கடந்த 2017ம் ஆண்டு தனது காதலனான வீரேந்திர சௌத்திரி என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்ததோடு செட்டில் ஆகிவிட்டார். அத்தோடு இவர் கர்ப்பமாகியுள்ளதாகவும் அண்மையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் இவருக்கு சீமந்த நிகழ்வு நடந்திருக்கிறது.

அது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement