• Sep 20 2024

தங்கலான் படத்திற்காக மிரள வைக்கும் சீயான் விக்ரமின் கெட்டப்- வைரலாகி வரும் போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். சினிமாவுக்காக தன் உடலை வறுத்திக்கொண்டு நடிக்கும் நடிகர்களில் விக்ரமும் ஒருவர். ஐ படத்திற்காக இவர் உடல் எடையை குறைத்தது பலரையும் வியக்க வைத்தது. 

இதுதவிர ஏராளமான கெட்-அப்களில் நடிக்கும் சவால் மிகுந்த வேடங்களில் நடிப்பதையும் விக்ரம் அதிகம் விரும்புவார். அவரின் நடிப்புக்கு தீணி போடும் வகையில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் அமைந்திருந்தது.


பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் விக்ரம் தங்கலான் படத்தில் நடித்து வந்தார். பா.இரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சர்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.

தங்கலான் படத்திற்காகவும் நடிகர் விக்ரம் உடல் எடையை குறைத்து மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரம் உடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. 


வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் விக்ரமின் புதிய கெட்டப் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement