• Nov 11 2024

மனோபாலா இரங்கல் செய்தியில் கூடவா சுயபுகழ்... இளையராஜாவை திட்டித்தீர்த்து வரும் நெட்டிசன்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என வலம் வந்த மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார். அத்தோடு கடந்த சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்துள்ளார் மனோபாலா. ஆனால், உடல் நிலை மிகவும் மோசமானதால் சிகிச்சை பலனில்லாமல் மனோபாலா உயிரிந்தார்.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது  திரையுலக பயணத்தைத் தொடர்ந்தவர் மனோபாலா. ரஜினி, விஜயகாந்த், மோகன், சத்யராஜ், பிரபு என முன்னணி ஹீரோக்களை இயக்கியுள்ள மனோபாலா, அவர்களுடன் பல படங்களிலும் நடித்துள்ளார். இதனால், மனோபாலா மறைவை அறிந்த திரையுலகினர் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே இசையமைப்பாளர் இளையராஜாவும் மனோ பாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், தன்னிடம் மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருந்த இயக்குநரும் நடிகருமான மனோபாலா காலமான செய்தி கேட்டு மிகவும் துயரமடைந்தேன். மனோபாலா ஆரம்பத்தில் பத்திரிக்கையாளராகவும் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். பின் தனியாக திரைப்படங்கள் இயக்கினார்.

அத்தோடு , "தன்னை சந்திக்க வேண்டும் என்பதற்காக நான் எப்போது காரில் வருவேன் என்று தெரிந்துகொண்டு, பல நாட்கள் கோடம்பாக்கம் பாலத்தில் காத்து இருப்பார். நான் காரில் புறப்படும் நேரம் தெரிந்துகொண்டு கோடம்பாக்கம் பாலத்தில் காத்திருந்த எத்தனையோ இயக்குநர்களில் மனோபாலாவும் ஒருவர்" என தெரிவித்து இருந்தார். இளையராஜாவின் இந்த வீடியோ தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

"மனோபாலாவின் இரங்கல் செய்தியில் கூடவா இவ்வளவு சுய புகழ் தேவை. இந்த மனிதரிடம் இதை எதிர்பார்க்கவில்லை" என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், "நீங்க இரங்கல் செய்தி சொல்லலன்னு யாரு அழுதா?. ஆணவத்துல அழியிறத Live'ல காட்டுறார் மனுஷன்... ஒருத்தர் பொனத்த வெச்சிட்டு அவர்செஞ்ச கெட்டத பேசக்கூடாதுன்னு சொல்லுவாங்க, அங்க வந்து உங்க பெருமை பேசுறது ரொம்ப முக்கியமா?. மனோபாலா கூடவே காருக்காக நின்னவங்களையும் சேர்த்து இளையராஜா அசிங்கப்படுத்தியுள்ளார்" என விமர்சித்துள்ளனர்.

எனினும் அதேபோல், இன்னொரு நெட்டிசன் "ஏய்யா இவர் வீடியோவை யார் கேட்டா? இப்படி ஆணவமா பேசுறாரு இரங்கல் தானாயா சொல்லணும் இரண்டு வரியில புராணம் படிக்கிறாரு. இவர பார்க்க யாரெல்லாமோ பாலத்தில காத்து கிடந்தாங்களாம் அதெல்லாம் சொல்லி கேவலப்படுத்துறாரு இந்தாளு. மனோபாலாவின் ஆன்மா கூட இவரை மன்னிக்காது. இந்தளவு கர்வமான பேட்டி எதுக்குயா இது எப்ப நிக்கபோகுதோ? இப்படியெல்லாம் இறந்து போனவரை கேவலப்படுத்தி பார்க்கிறவங்க நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள், வேதனை" என பதிவிட்டுள்ளார்.

அத்தோடு இளையராஜாவின் இந்த இரங்கல் வீடியோவை மேலும் பலரும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இசை ஞானம் மட்டும் இருந்தால் போதாது மனித நேயம் அவசியம் எனவும் அவர்கள் வறுத்தெடுத்துள்ளனர். சமீபத்தில் தான் ஜேம்ஸ் வசந்தன் - இளையராஜா பிரச்சினை மிகப் பெரிய சர்ச்சையாகி இருந்தது. எனினும் தற்போது மனோபாலாவுக்கு இரங்கல் தெரிவிப்பதாக தனது சுயபுராணம் பாடி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளார் இளையராஜா.



Advertisement

Advertisement