• Sep 21 2024

செந்தில் வந்த கார் ஒரு மலைப் பகுதியில் உருண்டோடிய காட்சி - படப்பிடிப்பில் நடந்த பரபரப்பான சம்பவம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 9களில் காமெடி ஜாம்பவானாக கலக்கி வந்தவர் தான் நடிகர் செந்தில். இவர் கவுண்டமணியுடன் சேர்ந்து நடித்த பல திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. சில காலம் படவாய்ப்பில்லாததால் இருவரும் சினிமாவில் இருந்து விலகியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து செந்தில் தற்பொழுது பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் தடை அதை உடை படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை இயக்குநர் ராகேஷ் என்.எஸ் இயக்குவதோடு இப்படத்தில் முக்கிய கதாப்பத்திரத்தில் செந்திலின் மகனும் நடித்து வருகின்றார்.

நடிகர் பாபி சிம்ஹா மற்றும் காமெடி நடிகர் செந்தில் வந்த கார் ஒரு மலைப் பகுதியில் உருண்டோடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. பாபி சிம்ஹா மற்றும் செந்தில் உடன் மேலும், சில நடிகர்களும் அந்த காருக்குள் இருந்தனர்.

உருண்டோடி வரும் காரில் இருப்பவர்களை காப்பாற்றுவது போல உடனடியாக ஓடிப் போய் பழைய ஜோக் தந்துரை அந்த காரை பிடித்து நிறுத்துகின்றார். இந்த காமெடி வீடியோ ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. உண்மையில், அது ஒரு ஷூட்டிங் ஸ்பாட் காட்சி என்பதை அறிந்து கொள்ளும் ரசிகர்கள் படக்குழு செட்டப் செய்த காட்சியை பார்த்து சிரித்து ஷேர் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement