• Nov 11 2024

யூடியூபரை காதலித்து திருமணம் செய்த சீரியல் நடிகை ஜனனி - வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவை போல் சீரியல் நடிகர், நடிகைகளும் காதலித்து திருமணம் செய்துகொள்வது என்பது தொடர்கதை ஆகி வருகிறது. மெட்டி ஒலி சேத்தன் - பிரியதர்ஷினி, சரவணன் மீனாட்சி செந்தில் - ஸ்ரீஜா, ராஜா ராணி சீரியலில் நடித்த சஞ்சீவ் - ஆலியா மானசா, திருமணம் சீரியலில் நடித்த சித்து - ஷ்ரேயா என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த நிலையில், தற்போது மற்றுமொரு சீரியல் நடிகை ஒருவர் யூடியூப் பிரபலத்தை காதலித்து கரம்பிடித்து உள்ளார்.


சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிவா மனசுல சக்தி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஜனனி பிரதீப். இவர் தன்னுடன் ஆல்பம் பாடலில் நடித்த யூடியூப் பிரபலமான இனியன் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். 


இருவரும் அவ்வப்போது தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வந்த இவர்கள் கடந்த மாதம் தான் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.


காதலை அறிவித்த ஒரே மாதத்தில் அந்த ஜோடி திருமணமும் செய்துகொண்டுள்ளது. இனியன் - ஜனனி பிரதீப் ஜோடியின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.



அவர்களது திருமணத்தில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிபிரியா, சூப்பர் சிங்கர் பிரபலம் சாம் விஷால் உள்பட ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இனியன் - ஜனனி பிரதீப் ஜோடியின் திருமண புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.




Advertisement

Advertisement