• Sep 20 2024

சமந்தா மற்றும் விஜய்தேவர்கொண்டாவை நேரில் சந்தித்த சீரியல் நடிகை ரவீனா- அடடே இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு இயக்குநரான சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'குஷி'. இதில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, சரண்யா பொன்வண்ணன், ரோகிணி, ‘வெண்ணிலா’ கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

 காதலை மையப்படுத்தி உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் செபடெம்பர் மாதம் ரிலீஸாகவுள்ளது.இதில் நடிகை சமந்தா பேகம் எனும் இஸ்லாமீயப் பெண் கதாப்பாத்திரத்தில் காஷ்மீரில் வசிக்கும் பெண்ணாக நடித்திருக்கிறார்.


இவரை காதலிக்கும் நாயகன் விஜய் , காதலில் வெற்றிப்பெற்றாரா? என்பது குறித்த உணர்வு பூர்வமான காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் இதற்கு  பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிககவும் பிரமாண்டமாக அண்மையில் நடைபெற்றது.

இப்படியான நிலையில் அண்மையில் குஷஜ பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா மற்றும் விஜய்தேவர் கொண்டா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.அவர்களை சீரியல் நடிகை ரவீனா சந்தித்து பேசியதோடு அவர்களுக்கு பரிசில்களையும் வழங்கியுள்ளார். இது குறித்த பதிவை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement