சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் உலக அளவில் பிரபல்யமான இயக்குநராக வலம் வருபவர் தான் இயக்குநர் பா. ரஞ்சித்.இப்படத்தில் நடிகர் ஆர்யா முரட்டுத் தனமான உடம்புடன் சார்பட்டா பரம்பரை பட்த்தில் குத்துச்சண்டை வீரராக நடித்திருந்தார்.
பீரியட் படமாக வந்த அந்த படத்தில் நடித்த ரங்கன் வாத்தியார், வேம்புலி, டேன்சிங் ரோஸ் என பல அற்புதமான கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.இது தவிர நீலம் புரொடக்ஷன்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தியும் வருகின்றார்.
இப்படத்தைத் தொடர்ந்து சியான் விக்ரமை வைத்து புதிய படத்தை இயக்கி வருகின்றார். 18ம் நூற்றாண்டில் நடைபெறும் வரலாற்று சிறப்பு வாய்ந்த கதையாக உருவாகும் இந்த படம் 3டியில் வெளியிடவும் ரஞ்சித் திட்டமிட்டுள்ளார்.
அந்த படத்திற்கான பூஜை இன்று சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.விழாவில் நடிகர் சிவகுமார் உள்ளிட்ட ஏகப்பட்ட திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைக்க போகிறார்.
'சீயான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதை, திரைக்கதையை தமிழ் பிரபா எழுத, ஒளிப்பதிவை கிஷோர் குமார் கவனிக்கிறார். சண்டை காட்சிகளை அன்பறிவு அமைக்க, நடனங்களை சாண்டி மேற்கொள்கிறார். இப்படத்தின் பாடல்களை கபிலன், அறிவு, உமாதேவி ஆகியோர் எழுதுகிறார்கள். பா. ரஞ்சித் இயக்கும் 'சீயான் 61' படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் படக்குழுவினர், படத்தில் இடம்பெறும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்
- ஒரே நேரத்தில் உயிரை விட்ட ஜானகி, ராமன் தம்பதி.. செய்த சத்தியத்தால் பாரதி எடுத்த முடிவு – இன்றைய எபிசோட் அப்டேட்
- விருது விழாவுக்கு எல்லை மீறிய கவர்ச்சி உடையில் வந்த ராஷ்மிகா- வைரலாகும் வீடியோ
- பிரச்சனையின் முதல் கட்டமாக வாய் திறந்த கோபி; ராதிகா எடுத்த முடிவு – இன்றைய எபிசோட் அப்டேட்
- “சியான் 61” படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!