• Nov 11 2024

ஒரே சேனலில் இணையவிருக்கும் ஷபானா- ஆர்யன் தம்பதிகள்….மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த சீரியல் நடிகைகளில் ஒருவர் நடிகை ஷபானா. இவர் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் "செம்பருத்தி" என்ற சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.

இவர் "பாக்கியலட்சுமி" சீரியலில் செழியன் ரோலில் நடித்து வந்த சின்னத்திரை நடிகர் ஆரியனை காதலித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இவர்களது திருமணம் இடம்பெற்றது. ஷபானா முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்பதாலும் ஆர்யன் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதாலும் பெற்றோரை எதிர்த்தே ஷபானா ஆரியனை மணம் முடித்திருந்தார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தமது திருமணத்தைத் தொடர்ந்தும் தமது சினிமா கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். தற்போது ஆர்யன் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் ஒன்றில் லீட் ரோலில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவருக்கு ஜோடியாக மோக்ஷிதா நடிக்க இருக்கின்றார். மேலும் இந்த சீரியலின் கதை அம்மா-மக்கள் சென்டிமெண்டை அடிப்படையாகக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

கணவன், மனைவி ஒரே சேனலில் நடிக்கவிருப்பதால் ரசிகர்கள் செம குதூகலத்தில் உள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement