• Sep 20 2024

தி லெஜண்ட் பட ஹீரோ அண்ணாச்சியின் வயதை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்- என்னய்யா சொல்லுறீங்க..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் மிகவும் பிரபலமான தொழிலதிபராகவும் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளராகவும் அறியப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் சரவணன் அருள்.

எப்போதுமே தனது தொழிலில் கவனம் செலுத்தி வருகின்ற இவர் தற்போது’ தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கின்றார்.

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுட்டேலா ஹீரோயினாக நடித்திருந்தார்.மேலும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் லெஜண்ட் சரவணன் அருளின் வயது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்தான் சரவணன் அருள் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். மகளின் திருமணத்தை கிராண்டாக நடத்தினார் சரவணன் அருள்.

தற்போது தி லெஜண்ட் படத்தில் ஹீரோவாக நடித்துள்ள சரவணன் அருளுக்கு 51 வயது என தகவல் வெளியாகி உள்ளது.

1970ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி பிறந்துள்ளார் சரவணன் அருள். அவரது வயதை கேட்ட ரசிகர்கள், பார்த்தால் 51 வயது என்று சொல்ல முடியாது. 30 ப்ளஸ் என்றுதான் சொல்ல முடியும் என கூறி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement