தென்னிந்திய சினிமாவில் இறுதியாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படம் தான் ஜவான். ஷாருக்கான் நடிப்பில் வெளியான இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார்.இப்படத்தின் மூலம் நயன்தாரா பாலிவூட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.அத்தோடு இப்படம் வசூலிலும் அள்ளிக் குவித்து வருகின்றது.
பாலிவுட்டில் முதல் படமே ஷாருக்கான் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையிலும், ப்ரமோஷனுக்கு செல்ல மாட்டேன் எனும் தனது கொள்கையில் இருந்து நயன்தாரா மாறவே இல்லை.ஜவான் படத்தின் ப்ரமோஷனுக்கு மட்டுமின்றி, சமீபத்தில் ஷாருக்கான் நடத்திய வெற்றி கொண்டாட்டத்திலும் நயன்தாரா பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா அம்பானி வீட்டில் நடந்த கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியது.
ஷாருக்கானின் ஜவான் சக்சஸ் பார்ட்டியை புறக்கணித்த நடிகை நயன்தாரா அம்பானி வீட்டு விசேஷத்திற்கு மட்டும் சென்ற நிலையில் ஷாருக்கான் சற்றே கடுப்பாகி உள்ளார் என்கிற பேச்சுக்கள் பாலிவுட்டில் தற்போது அடிபட்டு வருகின்றன.
Listen News!