• Nov 17 2024

மீண்டும் சூடுபிடித்து ஷாருக்கான் மகனின் போதை பொருள் விவகாரம்...நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஷாருக்கான் மகன் ஆரியன் கான் மீது வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட, NCB அதிகாரி சமீர் வான்கடே மீது, CBI வழக்கு பதிவு செய்துள்ளது.

போதைப்பொருள் வழக்கில், நடிகர் ஷாருக்கான் மகனை கைது செய்த என் சி பி அதிகாரி சமீர் வான்கடே  மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஷாருக்கான் மகன் ஆரியன் கான் மீது, வழக்குப்பதியாமல் இருக்க சமீர் வான்கடே உள்ளிட்ட, மூன்று அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக எழுத குற்றச்சாட்டின் அடிப்படியில் சிபிஐ இந்த வழக்கை பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளது.

 கடந்த 2021 ஆம் ஆண்டு, அக்டோபர் மூன்றாம் தேதி... மும்பையில் இருந்து கோவாவுக்கு புறப்பட்ட சொகுசு கப்பலில், ட்ரக்ஸ் பார்ட்டி நடப்பதாக, NCB அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அதிரடியாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், சொகுசு கப்பலை சோதனை செய்தனர்.

இந்த சோதனையில், போதை பொருள் பார்ட்டி நடப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இதில் கலந்து கொண்டதாக, ஷாருக்கான் மகன் ஆரியன் கான் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகையே புரட்டிப்போட்ட நிலையில் நிலையில்... ஆரியன் கான் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 இந்த சம்பவத்தில் ஆரியன் கான் மீது வழக்கு பதியாமல் இருக்க, என் சி பி அதிகாரி சமீர் வான்கடே உட்பட மூன்று பேர் சுமார் 25 கோடி பேரம் பேசியதாகவும், அதில் சமீர் வான்கடேவுக்கு மட்டும் 8 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த வழக்கில் குற்றவாளி தப்பிக்க கூடாது என்றும் உண்மை தகவல் வெளியாக வேண்டும் என பலரும் கூறி வந்தனர்.

ஆரியன் கான் விவகாரத்தில் சமீர் வான்கடே லஞ்சம் பெற்றதாக மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப்மாலியும்  குற்றம்சாட்டி இருந்தார். லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து, சமீர் வான்கடே இந்த வழக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த விசாரணை மும்பையில் இருந்து டெல்லி பிரிவுக்கு மாற்றப்பட்டது. சமீர் வான்கடே  டெல்லி பிரிவுக்கு உதவுவார் என்றும் தகவல்கள் வெளியானது.

 இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட என் சி பி அதிகாரி சமீர் வான்கடே சமீபத்தில் சென்னைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். தற்போது இந்த போதை பொருள் விவகாரம் புகைந்து கொண்டே இருக்கும் நிலையில், சமீர் வான்கடே மீது சிபிஐ அதிரடியாக வழக்கு பதிவு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாருக்கான் மகன் ஆரியன் கான் மீது வழக்கு பதியாமல் இருக்க சமீர் வான்கடே உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக எழுத குற்றச்சாட்டை தொடர்ந்து, சிபிஐ இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. எனவே மீண்டும் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானின் போதை பொருள் விவகாரம் பேசும் பொருளாக மாறி உள்ளது.

Advertisement

Advertisement