• Nov 14 2024

ஷாருக்கானின் கதாபாத்திரம் எரிச்சல் ஊட்டியது... உண்மையை போட்டுடைத்த சக நடிகர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஃபரா கான் இயக்கத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'ஓம் சாந்தி ஓம்'. இப்படத்தில் நடிகர் ஷாருக்கான் ஓம் பிரகாஷ் மகிஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். அதாவது அப்படத்தில் அவர் ஒரு நட்சத்திரக் குழந்தையாகவும், சூப்பர் ஸ்டாராகவும் ஓம் கபூராக மறுபிறவி எடுக்கிறார். 


குறிப்பாக 15 ஆண்டுகளுக்கும் மேலாக, அந்தத் திரைப்படம் தொடர்ந்து ரசிகர்களின் நெஞ்சங்களில் தனி இடத்தை பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஷாருக்கானுடன் இணைந்து தீபிகா படுகோனே நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்றது. 

மேலும் இவர்களுடன் இணைந்து இப்படத்தில் அர்ஜுன் ராம்பால் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் ஓம் சாந்தி ஓம் படத்தில் ஷாருக்கான் நடித்த ஓம் கபூர் கதாபாத்திரம் எரிச்சல் தருவதாக இருந்தது என அர்ஜுன் ராம்பால் ஓப்பனாக கூறியிருந்தார். 


அதாவது "ஓம் சாந்தி ஓம் படத்தில் ஷாருக்கான் சினிமாவில் ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ரோலில் நடிக்கிறார். அவர் தீபிகா படுகோனேவை வெறித்தனமாக காதலிக்கிறார். ஆனால் தீபிகா படுகோனே பெரிய தயாரிப்பாளரான  அர்ஜுன் ராம்பாலை ரகசியமாக திருமணம் செய்து கொள்கிறார். 


இதன் பின்னர் ஷாருக்கான் மற்றும் தீபிகா இருவரையும் அர்ஜுன் கொலை செய்கிறார். இதனைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாதியில் ஷாருக் ஒரு பணக்கார வீட்டில் மறுபிறவியாக பிறந்து சூப்பர் ஸ்டார் ஓம் கபூராக மாறுகிறார். ஓம் சாந்தி ஓம் படத்தில் ஷாருக்கானின் கதாபாத்திரம் ஒரு 'நேப்போ' பேபி என்று அப்பேட்டியில் சுட்டிக்காட்டி அது பற்றி அர்ஜுனிடம் கேட்டதற்கு " ஓம் சாந்தி ஓம் படத்தில் ஷாருக்கானின் ஓம் கபூர் கதாபாத்திரம் ஒரு 'நேப்போ' கதாபாத்திரமாக எரிச்சலூட்டும் வகையில் இருந்தது.

ஒரு திரைப்படக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நிச்சயம் ஒரு பெரிய நன்மை உண்டு. அவர்களும் அதே துறையில் சேர விரும்பினால் நிச்சயமாக நல்ல ஒரு தொடக்கம் கிடைக்கும். அதே சமயத்தில் மற்றவர்களை காட்டிலும் வாய்ப்புகளும் அதிகமாக கிடைக்கும். ஆனால் அதுவே அவர்களுக்கு ஒரு விதியாகவும் அமையும்" எனவும் கூறி இருந்தார் நடிகர் அர்ஜுன் ராம்பால்.

Advertisement

Advertisement