தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் நடிகை மீனா. இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் எந்த ஒரு நடிகைக்கும் கிடைக்காத ஒரு நல்ல அனுபவம் மற்றும் ஒரு நல்ல வாய்ப்பு, அதிர்ஷ்டம் அனைத்துமே இவருக்கு கிடைத்திருந்தது.
அந்தவகையில் இவர் முதன் முதலில் 1982 ஆம் ஆண்டு 'நெஞ்சங்கள்' என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதற்கு அடுத்தபடியாக 'எங்கேயோ கேட்ட குரல்' என்ற திரைப்படத்தில் கைக்குழந்தையாக நடித்திருப்பார். பின்னர் 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்தார்.
மீனா பல படங்களில் நடித்திருந்தாலும் அதில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த திரைப்படம் என்னவென்றால் 'என் ராசாவின் மனசிலே' என்பதுதான். இந்த திரைப்படமானது மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், கேப்டன் விஜயகாந்த், அர்ஜுன், சத்யராஜ், நெப்போலியன் எனப் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்தார்.
இவ்வாறாக நடிப்பின் மூலம் புகழின் உச்சிற்கு சென்ற மீனாவின் கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கின்றார். ஐவரும் தற்போது ஒரு குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில் தற்போது இவரின் தந்தையின் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் இவரது தந்தையை பார்த்த ரசிகர்கள் அப்படியே மீனா போலவே இருக்கிறார் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
Listen News!