• Sep 20 2024

பிரபல தீவு ஒன்றில் 13 கோடி பெறுமதியான விவசாய நிலம் வாங்கிய ஷாக்கானின் மகள்- காலாய்த்து வரும் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நடித்த ஜீரோ திரைப்படம் படுதோல்வி அடைந்ததால் 4 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஷாருக்கான். அதன்பின் பதான் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

பதான் படத்தின் வெற்றிக்கு பின்னர் ஷாருக்கான் நடிப்பில் தற்போது ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார்கள். ஜவான் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படம் வருகிற ஜூன் மாதம் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது.

ஷாருக் கானின் மகள் சுஹானா கான் தற்போது The Archies என்ற படத்தின் மூலமாக நடிகையாக களமிறங்கி இருக்கிறார்.23 வயதாகும் சுஹானா கான் தற்போது மகாராஷ்டிராவின் Alibaug தீவு டவுனில் 12.91 கோடி ரூபாய்க்கு விவசாய நிலம் வாங்கி இருக்கிறாராம்.


அந்த 1.5 ஏக்கர் நிலையில் 2218 சதுர அடிக்கு வீடும் இருக்கிறதாம். அதை வாங்குவதற்காக 77.46 லட்சம் ருபாய் ஸ்டாம்ப் டியூட்டி செலுத்தி இருக்கிறார் அவர்.அதற்கான பத்திரத்தில் சுஹானா கான் தன்னை agriculturist என குறிப்பிட்டு இருக்கிறாராம். அதை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர். அங்கே விவசாய தொழில் செய்ய போகிறாரா அவர் என கிண்டல் செய்து வருகின்றனர். 


Advertisement

Advertisement