• Sep 20 2024

பொன்னியைத் திருமணம் செய்து கொண்ட சக்தி- வெளியாகிய வீடியோ- அப்போ ப்ரீத்தியின் நிலமை என்ன?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் பொன்னி. இந்த சீரியலில் பொன்னி என்னும் கதாப்பாத்திரத்தில் வைசு சுந்தரும் சக்தி என்னும் கதாநாயகன் கதாப்பாத்திரத்தில் சபரியும் நடித்து வருகின்றனர். இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

மேலும் பொன்னியை சக்திக்கு தான் திருமணம் செய்து வைப்பதாக இருவருடைய பெற்றோரும் முடிவு செய்திருந்தனர். இருப்பினும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இரண்டு குடும்பமும் பிரிந்த விட்டதோடு சக்திக்கு பொன்னி பற்றிய நினைவு எதுவுமே இல்லை. இருப்பினும் பொன்னியின் மீத பாசமாக இருந்து வருகின்றார்.


பொன்னி சக்தியைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றார். சக்தி ப்ரீத்தி என்பவரைக் காதலிக்கின்றார். இருவருக்கும் திருமண ஏற்பாடும் வெகுவாக நடைபெற்று வருகின்றது.அத்தோடு சக்தியை திருமணம் முடித்தாக வேண்டும் என்று மாமா பொண்ணு வேற திரிகின்றார். 

இதனால் சக்தி யாரைத் திருமணம் செய்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகக் காணப்பட்டது. அதன்படி தற்பொழுது இந்த சீரியலில் நடித்து வரும் ஸ்ரீதேவி ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பொன்னி கழுத்தில் தாலி அணிந்திருக்கின்றார். இதனால் சக்தி பொன்னியைத் தான் திருமணம் செய்திருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.மேலும் இந்த எப்பிஷோட்டைக் காண ஆவலாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement