• Sep 20 2024

அனிரூத்தின் குடும்ப விழாவில் கலந்து கொண்ட ஷாலினி மற்றும் அவரது பிள்ளைகள்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக விளங்குபவர் தான் அஜித் குமார். இவர் நடிப்பில் தற்பொழுது விடாமுயற்சி என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகவும் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் ரெஜினா ஜோடியாக நடிக்கிறார்கள்.

படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளி நாடுகளிலேயே நடைபெற்று வருகின்றது. அடுத்த ஆண்டு படம் வெளியாகும் என்று நம்பப்படுகின்றது. படப்பிடிப்பில் அஜித் பிஸியாக இருப்பதால் இங்கு குடும்பத்தை ஷாலினி தான் பார்த்து வருகின்றார்.ஆரம்பத்தில் இருந்தே அஜித்துக்கு ஒரு ஃபுல் சப்போர்ட்டாக ஷாலினி இருந்து வருகிறார். 


பிள்ளைகளின் கல்வியில் இருந்து அவர்கள் சம்பந்தப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி வரை எல்லாவற்றிலும் ஷாலினியே கவனித்து வருகிறார்.இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிரூத் வீட்டில் ஆயுத பூஜைக்காக கொழு வைத்து பூஜை செய்து தரிசனம் செய்தனர்.


இதற்காக திரையுலகை சார்ந்த முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டன. அதில் அஜித் வீட்டிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.அதை மிகவும் பணிவாக ஏற்று ஷாலினி, அஜித்தின் மகள் மற்றும் மகன் ஆகியோர் கலந்து  கொண்டனர்.இது குறித்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement