• Nov 14 2024

பிரிந்த காதலி... பாதியில் நின்று போன கல்யாணம்... 45வயதாகும் ஷாலினியின் சகோதரருக்குள் இப்படி ஒரு சோகமா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகையும், அஜித்தின் மனைவியுமான ஷாலினிக்கு ஷாமிலி என்ற தங்கையும், ரிச்சர்ட் ரிஷி என்ற சகோதரரும் உள்ளனர். இவர்கள் இருவரும் சினிமாப் பிரபலங்களாக உள்ளனர். அதிலும் குறிப்பாக ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அதேபோன்று ரிச்சர்ட் ரிஷியும் சினிமாவில் பிரபல நடிகராக உள்ளார். இவரும் சிறுவயதில் இருந்தே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் ரிச்சர்ட் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவ்வாறாக படங்களில் பிசியாக நடித்து வரும் ரிசார்ட் ரிஷி சமீபகாலமாக நடிகை யாஷிகா ஆனந்துடன் நெருக்கமாக பழகி வருவதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கள் அடிக்கடி வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் ரிச்சர்ட் ரிஷியின் முதல் காதல் குறித்த தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.


அந்தவகையில் 45 வயதாகும் ரிசார்ட் ரிஷி இன்றுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இருந்தாலும் இதற்கு முன்னர் அவர் வேறொரு பெண்ணைக் காதலித்து அவருடன் திருமணம் வரை சென்று அந்தத் திருமணம் பாதியில் நின்றுள்ளது. 

இவ்வாறாக அந்த காதல் திருமணம் பாதியில் நின்று போனதால் தான் இதுவரை காலமும் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருந்து வருகிறாராம் ரிச்சர்ட் ரிஷி.  அவரின் முதல் காதலி வேறு யாருமில்லை. தமிழ் சினிமாவின் மிக முக்கிய பாடலாசிரியர்களில் ஒருவரான கண்ணதாசனின் பேத்தி சத்யலட்சுமி தான். இவருடன் மிகவும் நெருங்கிப் பழகி வந்துள்ளார் ரிச்சர்ட்.


இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் அந்த பெண்ணின் தந்தையும், நடிகர் ரிச்சர்ட்டின் தந்தையும் குடும்ப நண்பர்களாகவும் இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாக ஜாதி, மதம் எல்லாம் பார்க்காது இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து திருமண வேலைகளும் தடபுடலாக நடந்துள்ளது. அந்தவரிசையில் கடந்த 2012-ம் ஆண்டு ரிச்சர்ட் ரிஷிக்கும், சத்யலட்சுமிக்கு திருமணம் நிச்சயமானது. இவர்களது நிச்சயதார்த்தத்தை நடிகர் அஜித் முன் நின்று பிரமாண்டமாக நடத்தி வைத்தார். 


ஆனால் துரதிர்ஷ்டவசமாக நிச்சயதார்த்தத்துக்கு பின் இந்த காதல் ஜோடிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். இதனால் திருமணமும் பாதியில் நின்று போனது. இதனால் தான் நடிகர் ரிச்சர்ட் ரிஷி இதுவரை காலமும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகின்றாராம்.

Advertisement

Advertisement