தமிழ் சினிமாவில் உச்ச நட்ஷத்திரமாக இருந்தவர் தான் ஷாலினி. இவரின் உடன் பிறந்த சகோதரி தான் நடிகை ஷாம்லி. இவர் டைரக்டர் மணிரத்னத்தின் ‘அஞ்சலி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர்.
மேலும் இவர் குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய, மாநில அரசு விருதுகளை பெற்றவர் பேபி ஷாம்லி. குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்த அவர், குமரியான பின்பு தனது அக்காவின் கணவர் அஜித் நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்’ மற்றும் ‘ஒய்’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். பின்னர் வெளிநாடு சென்று தன் படிப்பைத் தொடர்ந்தார்.
இதன் பின்னர் 2016 -ம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீரசிவாஜி என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாபாத்திரத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்தது ஷாமிலி தானாம். ஆனால் இப்படத்தின் ஷூட்டிங்கில் சரியான நேரத்திற்கு செல்லாமல் லேட்டாக வருவது என கொஞ்சம் ஆட்டிட்யூட் காட்டியிருக்கிறார் ஷாமிலி.
இதன் காரணமாக பலமுறை ஷூட்டிங் நடக்காமல் போனதாம். இதனால் ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த படக்குழு ஷாமிலி வேண்டாம் என்று நீக்கியதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Listen News!