லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் லியோ படம் இன்று வெளியாகியிருக்கிறது. பான் இந்தியா படமாக வெளியாகியிருக்கும் லியோவை கொண்டாடினர். அதிலும் முதல் காட்சியை விஜய் ரசிகர்கள் திருவிழாவாகவே மாற்றினர்.
காலையில் சீக்கிரமே திரையரங்குக்கு சென்று பட்டாசு வெடித்து, மேளதாளம் அடித்து அலப்பறையை கூட்டினர்.படத்தை தளபதி ரசிகர்கள் லோகேஷும், விஜய்யும் எங்களை ஏமாற்றவில்லை. இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக விஜய் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இப்படிப்பட்ட விஜய்யை ஸ்க்ரீனில் காட்டியதற்காகவே லோகேஷ் கனகராஜை கொண்டாடலாம். அதேபோல் லோகேஷின் மேக்கிங்கையும் பாராட்ட வேண்டும் என்கின்றனர். இப்படம் 1000ம் கோடி வசூலிக்கும் என்றும் நம்பப்படுகின்றது.
இப்படத்தைத் தொடர்ந்து விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படம் 3D VFX டெக்னாலஜியில் உருவாகி வருகிறது. இதற்காக படக்குழு சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர். அஜித்திற்கு எப்படி மங்காத்தா படத்தை கொடுத்தாரோ அதேபோல தளபதி விஜய்க்கும் ஹிட் கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.இந்நிலையில் வெங்கட் பிரபு தனது லியோ என்று பதிவிட்டு இருந்தார்.
அதற்கு படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, நாம் இனி ஆரம்பிக்க வேண்டும் என்று தளபதி 68 படத்தின் அப்டேட் குறித்து பேசியுள்ளார். இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!