• Sep 20 2024

1000 கோடி ருபாய் பட்ஜெட்டில் சங்கரின் படம் -யார் ஹீரோ தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஷங்கர் பிரம்மாண்ட படங்கள் இயக்குவதற்கு பெயர் பெற்றவர் என்று தான் கூற வேண்டும். எந்திரன், 2.0 போன்ற பல பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் எடுத்த அவர் தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்திற்கு RC15 என தற்காலிகமாக பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

மேலும் இந்த படத்தை முடித்தபின்னர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை தொடங்க இருக்கிறார். அதை முடித்தபிறகு அந்நியன் ஹிந்தி ரீமேக் படத்தை இயக்குகிறார் ஷங்கர்.

அந்த படத்தையும் முடித்தபிறகு ஹிந்தியில் ஒரு சயின்ஸ் பிக்ஷ்ன் படம் இயக்குகிறார் ஷங்கர் என தற்போது தகவல் பரவி வருகிறது.அடுக்கடுக்காய் படங்கள் வைத்திருக்கும் சங்கர் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பில் உள்ளார்கள் ரசிகர்கள்.

இவ்வாறுஇருக்கையில் அந்த படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் ஹீரோவாகவும், தெலுங்கு நடிகர் ராம் சரண் ஒரு முக்கிய ரோலிலும் நடிக்க இருக்கின்றனர் என சொல்லப்படுகிறது.

மேலும் ஆச்சர்யப்படுத்திய தகவல் எண்னென்றால் இந்த படத்திற்க்கு 1000 கோடி ருபாய் பட்ஜெட் எனவும் கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement