தமிழ் சினிமாவில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி இன்று முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்து நிற்பவர் இயக்குநர் ஷங்கர். இவருடைய படங்கள் அதிகளவில் அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களை மையமாக கொண்டமைந்த இருப்பதனால் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகின்றன.
சினிமாவில் ஒரு நடிகருக்கு எந்தளவிற்கு ரசிகர்கள் இருப்பார்களோ அந்தளவிற்கு ஒரு இயக்குநருக்கு அதிகளவான ரசிகர்கள் இருக்கின்றனர் என்றால் அது ஷங்கருக்கு மட்டும் தான். இவ்வாறு தன்னுடைய கதைக்களத்தினால் பல ரசிகர்களைக் கட்டிப் போட்ட இவர் தற்போது கமல் ஹாசனை வைத்து 'இந்தியன் 2' மற்றும் ராம் சரணை வைத்து 'ஆர்.சி 15' ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.
இப்படங்களில் ஆர்.சி 15 படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு திருப்பதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் முதல் திரைப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது.
அதாவது ஷங்கர் இயக்கிய முதல் படம் 'ஜென்டில்மேன்' என்பதை நாம் அனைவரும் அறிவோம். 1993-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்தார். மிகப்பெரியளவில் வெற்றியடைந்த இப்படமானது உலகளவில் ரூ. 21 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.
இதில் இந்தியளவில் ரூ. 17 கோடிக்கும் மேல் மற்றும் வெளிநாட்டில் ரூ. 3.96 கோடி வரையிலும் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு முதல் இடத்திலேயே அதிகளவு வசூலை வாரிக் குவித்த ஒருவராக இயக்குநர் ஷங்கர் திகழ்ந்து வருகின்றார்.
Listen News!