• Nov 10 2024

தன் மீதான விமர்சனங்களுக்கு விளக்கம் கூறிய ஷர்மிகா ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சமீபத்தில் தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியில் மருத்தவ இணை இயக்குனர் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் மருத்தவ நெறிமுறைகளை மீறி டாக்டர் ஷர்மிகா யூடியூபிலும் இன்ஸ்டாகிராமில் விடீயோக்களை பதிவிட்டு வருவதினால் யாராவது ஒருவர் அவரின் மீது வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தெரிவித்திருந்தார்.இவ்வாறுஇருக்கையில் இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் அதற்கு முதன் முறையாக பதிலைத்துள்ளார் டாக்டர் ஷர்மிகா.

எனினும் சமீபத்தில் அவர் பிரபல ஊடகத்திற்கு கொடுத்திருந்த பேட்டியில் அவர் கூறியதாவது `நான் எல்லோரும் சித்த மருத்துவம் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்படி செய்து வருகிறேன். நான் சென்னையில் உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லுரியில் பி.எஸ்.எம்.எஸ் என்ற மருத்துவ படிப்பே படித்து சென்னை அருகம்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமணையில் சித்தாமருத்துவ கவுன்சிலில் பதிவும் செய்துள்ளேன். நான் என்ன படித்தேனோ அதை தான் நான் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறேன் என்று தெரிவித்தார்.

அதே போல மாட்டு இறைச்சியால் பல விதமான நோய்கள் வரும் என்று தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள “நோயில்லா நெறி” புத்தகத்தில் இருந்தது. அதை வைத்துதான் உடல் உழைப்பு உள்ளவர்கள் ஆடு, மாடு போன்றவற்றை சாப்பிடலாம் ஆனால் பலர் அமர்ந்து வேலை பார்த்து வருகின்றனர். அதனால் தான் நான் மாட்டுக்கறி சாப்பிட கூடாது என்று கூறினேன். ஆனால் அதற்கு என்னை பாஜகவுடன் தொடர்பு படுத்தி ஏன் பேசவேண்டும்? என்று  தெரிவித்தார்.

நான் குலாப் ஜாமுன் வற்றி சொன்னது மனிதனின் இயல்பு தான். அதற்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறன். அதே போல நெய் யை உருக்கி சாப்பிட்டு விட்டு சூடு தண்ணீர் குடித்து நடை பயிற்சி செய்தால் முகம் பொலிவு பெரும் என்பது என்னுடைய அறிவுரை. இதை பலரும் செய்து புகைப்படங்களை]எனக்கு அனுப்பினார்கள். நான் பி.எஸ்.எம்.எஸ் படித்திருக்கிறேன் எனக்கும் எல்லா நோய்களுக்குமான அறிவும் இருக்கிறது. இப்போதெல்லாம் புதிய புதிய நோய் வருவதினால் உதகத்தில் இருப்பதாய் மட்டும் சொல்ல வேண்டும் என்றால் மருத்துவராக இருக்க முடியாது.

இதனைத் தொடர்ந்து பேசிய ஷர்மிகா மார்பக புற்று நோய் குறித்தும், மார்பகம் பேர்த்துவது குறித்தும் தனக்கு தெரிந்ததை சொன்னதாக கூறினார். மேலும் இவரை வைத்து சொல்லப்படும் ட்ரோல்களுக்கு தன்னுடைய அம்மா பாஜகவில் இருப்பதினால் விமர்சனம் வருவதாகவும் இனிமேல் நான் வெள்ளந்தியாக பேசாமல் தெளிவுடன் பேசப்போகிறேன் என்றும் கூறியிருந்தார். மேலும் இப்படி விமர்சனம் வருவதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று தன்னுடைய அம்மா சொல்லிக்கொடுத்ததாகவும் கூறியிருந்தார் ஷர்மிகா சரண்.

அத்தோடு  தான் தண்னை பிரபல படுத்துக்கொள்ள இவற்றை சொல்லவில்லை என்றும், அதற்கு அவசியமும் கிடையாது என்று கூறினார். அதோடு நான் எந்த செய்தி ஊடகத்திற்கும் ஒரு ருபாய் பணம் கூட கொடுத்தி பேட்டி கொடுக்க வில்லை என்று கூறினார். மேலும் இணை இயக்குனர் என்னிடம் இந்த விஷியத்தை சொல்லி இருக்கலாம், அதைதவிர்த்து சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிவைத்து தனக்கு வேதனை அளிக்கிறது என்று கூறியிருந்தார்.

Advertisement

Advertisement