தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் துணைக் கதாப்பாத்திரங்களிலும் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகர் பயில்வான் ரங்க நாதன். இவர் நடிகராக மட்டுமல்லாது பத்திரிகை ஆசிரியராகவும் இருந்து வருகின்றார்.
மேலும் இவர் நடிகர் நடிகைகளைப் பற்றி தவறாகப் பேசி பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார். இருப்பினும் இவர் கூறும் விடயங்களைப் பார்ப்பதற்கு என்றே இவரது யூடியூப் பக்கத்தில் ஏராளமான ரசிகர்கள் இவரை போஃலோ செய்கின்றனர்.
இவர் நடிகர் நடிகைகளைப் பற்றி பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார். அத்தோடு இவர் செய்வது தவறான விடயம் என பல பிரபலங்களும் கூறி வருகின்றனர். இருப்பினும் அவர் யாருடைய பேச்சையும் கேட்பதாக இல்லை.
இப்படியொரு நிலையில் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலில் பேட்டியளித்திருந்தார். அதில் இவரைப் பேட்டியெடுத்த தொகுப்பாளினி லயா இவரை பல கேள்விகள் கேட்டார். அவை அனைத்திற்கும் பொறுமையாக பதிலளித்து வந்தார் பயில்வான்.
ஒரு கட்டத்தில் லயா பயில்வானிடம் இருக்கும் ஆபாச போட்டோக்களை காட்டும் படி கேட்டார். ஆனால் பயில்வான் நாகரீக ம் கருதி அந்த போட்டோக்களை காட்டுவதற்கு மறுத்துவிட்டார். இதனால் லயாவுக்கும் பயில்வானுக்கும் இடையில் சிறு மோதலும் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது பயில்வான் ரங்கநாதன் லயா குறித்த, பல அந்தரங்க விஷயங்களை மீடியாவில் தெரிவித்து வருகிறார். அதாவது லயா மீது பல மோசடி புகார் இருப்பதாகவும் இவர் கள்ளக் காதலில் ஒருவருடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இப்படி வெளியான தகவலை பார்த்த ரசிகர்கள் அவரை மாட்டி விடுவதற்கு திட்டம் தீட்டிய லயா, தற்போது தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்டார் என்று கிண்டல் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- அடடே செம்பருத்தி சீரியல் நடிகையின் தம்பியா இது?-எப்படி மாறிட்டார் என்று பாருங்க
- 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை பாவனா- உற்சாகப்படுத்திய ரசிகர்கள்
- கறுப்பு நிற சல்வாரில் சும்மா தேவதை போல ஜொலிக்கிறீங்க நடிகை பிரியா பவானி ஷங்கர் மேடம்
- தலைப்பாகையுடன் வித்தியாசமான கெட்டப்பில் தனது மனைவியுடன் அஜ்மீர் தர்காவிற்கு சென்றுள்ள ஏஆர் ரஹ்மான்
- ‘நான் ஒன்னும் பெரிய உத்தமி இல்ல’- பிரபல பேட்டியில் கொந்தளித்த விக்ரம் பட நடிக
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!