'அங்காடித்தெரு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சிந்து. படங்களில் நடித்து வந்த அவர் தொடர்ந்து சின்னத்திரையில் நடித்து வந்து, மட்டுமல்லாது சமூக சேவையிலும் ஈடுபட்டு வந்தார்.
மேலும் கொரோனா காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிந்து மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற போதிய பணம் இல்லாததால் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டார். உடல்நிலை மோசமடைந்தமையைத் தொடர்ந்து சிந்து இன்று உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பு பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. இதனையடுத்து பலரும் நேரடியாகவும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் தங்களது இரங்கலினைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ஷகிலா அவர்கள் சிந்துவின் மறைவு குறித்து தற்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருக்கின்றார். அதில் அவர் கூறுகையில் "தெரிந்தோ தெரியாமலோ நாம தப்புப் பண்ணினால் இதுதான் நிலைமை, நான் என்னோட ப்ரண்ட்ஸ் எல்லாருமே கடவுள்கிட்ட வேண்டுறது அவளை சீக்கிரம் கூப்பிட்டுக்கோ என்று தான், சிந்து நிறைய நல்ல விஷயம் பண்ணியிருக்கா, அவ அந்தக் கொரோனா காலத்தில் யார் யாருக்கு அரிசி, சாப்பாடு வேணுமோ அத்தனை பேருக்கும் கொடுத்திருக்கா,
ஆனால் கடைசிக் காலத்தில் அவங்களால் சாப்பிடக் கூட முடியாது, இதையெல்லாம் வச்சுப் பார்க்கும் போது எனக்கு உண்மையிலும் கடவுள் இருக்காரா..? இல்லையா..? என்று தான் தோணுகிறது, கடவுள் என்றால் எந்தப் பெரிய தப்புப் பண்ணினாலும் மன்னிப்பு கேட்டாலும் மன்னிச்சிடணும், சிந்து தெரிந்து தெரியாமலோ ஏதாவது தப்புப் பண்ணியிருந்தாலும் கடவுள் இவளை எதுக்கு மன்னிக்கல" என்றார்.
மேலும் "இப்படி ஒரு உடல் ரீதியான வலியை கொடுத்திருக்க வேணாம், சிந்துக்கு ஒரு மகள் இருக்கா, அவளை எங்க குடும்பமாய் நினைச்சு அவளுக்கு நாங்க எல்லாருமே எப்பவும் உறுதுணையாய் இருப்போம்" எனவும் கூறியுள்ளார் நடிகை ஷகிலா.
Listen News!