ஐயா, சந்திரமுகி போன்ற படங்களின்மூலம் அறிமுகமான நயன்தாரா தமிழில் எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார். லேடி சூப்பர்ஸ்டார் என பெருமையாக அழைக்கப்படும் நயன்தாரா தமிழ் சினிமாவின் ஒரு அடையாளமாகவே மாறியிருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022ல் திருமணம் செய்துகொண்டார். இந்த அழகான ஜோடிக்கு உயிர், உலக் என இரட்டை மகன்களும் இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நம் நயன்தாரா ஜவான் திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து ஹிந்தி திரையுலகின் என்ட்ரி கொடுத்தார். இவர் நடித்த முதல் ஹிந்தி படமே 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது. இவர் இரு குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படி இந்த வசூல் சாதனை செய்த படத்தில் நடித்தார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
நயன் , விக்கியின் பெற்றோர் பிள்ளைகளை பார்த்திருப்பார்கள், என நினைத்திருப்போம் ஆனால் அதுதான் இல்லை. இந்த விஷயத்தை பற்றி பிரபல நடன மாஸ்டர் கலா சமீபத்தில் கொடுத்திருந்த ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கூறியிருக்கிறார்.
நயன்தாராவை நடிகையாக தான் வெளியே உள்ளவர்களுக்கு தெரியும், அனால், அவர் ஒரு பக்கா ஹவுஸ் வைஃப். ஜவான் படத்தின் படப்பிடிப்புக்கு செல்லும் போதெல்லாம் இரு பிள்ளைகளையும் உடன் அழைத்துச் சென்று கூடவே வைத்து பார்த்துக் கொண்டார்.வெளியுலகில் லேடி சூப்பர்ஸ்டார், தயாரிப்பாளர், முன்னணி நடிகை, தொழிலதிபர் என அத்தனை முகங்கள் இருந்தாலும் அவரின் வீட்டிற்குள் அவர் ஒரு மனைவி, அம்மா, குடும்பத்தலைவி என்றே இருக்கிறார். என கூறியிருந்தார்.
Listen News!