• Nov 14 2024

அவள என்ன உடைச்சாலும் அவ போராடு-ர ஒரு ஆளு "- ஜோவிதா குறித்து ஓபனாகப் பேசிய வனிதா விஜயகுமார்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியிருக்கிறது. இதில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா, விசித்திரா, மணிசந்திரா, விஷ்ணு விஜய், ஐஷு, அனன்யா ராவ், பவா செல்லதுரை, ஜோவிகா விஜயகுமார், யுகேந்திரன், சரவண விக்ரம், விஜய் வர்மா, மாயா கிருஷ்ணன், அக்‌ஷயா உதயகுமார் ஆகிய 18 பேர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

எப்போது ஒரு வீட்டில் மட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த முறை பிக்பாஸ் வீடு மற்றும் ஸ்மால் பாஸ் வீடு என்று இரண்டு வீடுகளில் நடக்கிறது. இதற்காக ரூல்ஸ்களும், டாஸ்க்குகளும் புதிதாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. 


கேப்டனை கவர தவறிய ஆறு பேர்; ரூல்ஸை மீறியதற்காக இரண்டு பேர் என மொத்தம் எட்டு பேர் இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். அவர்கள் இந்த வாரம் எந்த டாஸ்க்கிலும் கலந்துகொள்ள முடியாது.


 நேற்றைய தினம் நாமினேஷன் நடந்தது. இதில் வனிதாவின் மகள் ஜோவிதாவும் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளார். இப்படியான நிலையில் ஜோவிதா குறித்து வனிதா கூறிய விடயம் தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதாவது ஜோவிதா என்ன உடைச்சாலும் அவ ரொம்ப ஸ்ரோங்காக இருப்பா, எதிர்த்துப் போராடுவாள், அவள் ரொம்ப ஸ்ரோங் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement