இந்த வார வீக்லி டாஸ்கிற்காக வீடு நீதிமன்றமாக மாறி உள்ளது. இதில், ஒவ்வொரு போட்டியாளர்களும் மெயின் டோர் கேமரா வழியாக தங்களுடைய வழக்கை பதிவு செய்ய வேண்டும்.குற்றம் சாட்டப்பட்ட நபர்களே அவருக்கான வழக்கறிஞரை தேர்வு செய்து அவருக்கான வழக்கை தயார் செய்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, போட்டியாளர்கள் அனைவரும் கேமரா முன்பு தங்களுடைய வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இதில், அமுதவாணன் தரப்பு வழக்கறிஞராக நேற்று அசீம் ஆஜராகி சிறப்பான வாதத்தை எடுத்து வைத்தார்.
அதனை அடுத்து இன்றைய தினம் அசீம் சாவியை எடுத்து ஒளித்து வைத்து விட்டு ஏடிகேவை திட்டிய சம்பவம் இன்றைய வழக்காக நடந்து கொண்டிருக்கின்றது. இதில் நீதிபதியாக ராம் இருந்து செயற்பட்டு வருகின்றார்.
இது ஒரு புறம் இருக்க நேற்றைய தினம் தலைவர் போட்டியில் மைனா வெற்றி பெற்றார். இருப்பினும் தனலக்ஷ்மி இத நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று சண்டை போட்டார். இது குறித்து வனிதா பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது தலைவர் போட்டியில் பந்து கீழால் தான் போனது ஆனால் தனலக்ஷ்மி மாத்தி சொல்லுறா.தலைவராக முதலே அமுதவாணனுடன் இருந்து டீம் பிரிக்கிறது பற்றி பேசினதே அவ தான் ஆனால் அவ மைனாவ சொல்லுறா.தலைவராக அருக்கிறவங்க தான் அவங்க டீமை பிரிப்பாங்க இது தான் ரூல்ஸ்.தனலக்ஷ்மிக்கு இதை பற்றி பேச உரிமையே இல்லை என வனிதா குறிப்பிட்டுள்ளார்.
Listen News!