• Sep 21 2024

அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் இவர் தான்- நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் அவரது ரீல் மகள்- வேற லெவலில் நடனம் ஆடுகின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராகவும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் காதல் மனைவியாகவும் இருப்பவர் தான் நயன்தாரா. இவர் தமிழ் திரையுலகில் ஐயா என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

மேலும் கடந்த ஜுன் மாதம் விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்த இவர் இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்துள்ளார்.அது மட்டுமன்றி கோல்ட், கனெக்ட், நயன்தாரா 75, இறைவன் ஆகிய படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.


இவரைப் போல திரை ஊடகங்களில் குட்டி நயன்தாரா என்று அழைக்கப்பட்டு வருபவர் நடிகை அனிகா.இவர் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், தொடர்ந்து விஸ்வாசம் படத்தின் மூலம் நயன்தாராவின் மகளாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் அனிகா தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் ஓ மை டார்லிங் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இந்நிலையில், தற்போது அனிகா நடன பயிற்சி ஒன்றில் இருக்கும் வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும், அடுத்த நயன்தாரா இவங்க தான் என்பது போல் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


நடிகை நயன்தாராவும் விரைவில் சினிமாவில் இருந்து விலகப்போவதாக தகவல் வெளியாகிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement