• Nov 19 2024

என் சந்தோச கண்ணீர் இவள் மட்டும் தான்- திருமண நாளில் sivakarthikeyan போட்ட எமோஷனல் போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் காமெடியனாக அறிமுகமாகியவர் தான் சிவகார்த்திகேயன். இதனைத் தொடர்ந்து தன்னுடைய விடாமுயற்சியினால் குறுகிய காலத்திற்குள் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்கின்றார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாவீரன் திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்புக் கிடைத்திருந்தது.

இவர் 2010ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆர்த்தியின் வருகைக்கு பிறகு தான் சிவகார்த்திகேயன் வாழ்க்கையே வேறு ஒரு தளத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது எனலாம்.


இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.அண்மையில் தன்னுடைய குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.இதனால் ரசிகர்கள் கியூட் பமிலி என்றெல்லாம் கமெண்ட் போட்டிருந்தனர். இப்படியான நிலையில் இன்றைய தினம் 13வது திருமண நாளை மனைவியுடன் இணைந்து கொண்டாடி  மகிழ்கின்றார்.


இதனால் மனைவிக்கு திருமண நாள் வாழ்த்துத் தெரிவித்து புதிய புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதற்கு அவர் கொடுத்த "என் சந்தோஷ கண்ணீரே" கேப்ஷன் தான் ஹைலைட். உயிரே படம் எஃபெக்ட்டில் சிவகார்த்திகேயன் இப்படியொரு கேப்ஷன் போட்டிருப்பது ரசிகர்களக் கவர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement