தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் தற்போது உலகளவில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
எனினும், லியோ படம் தொடர்பான பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டு தான் வருகின்றது. ஆனாலும், லியோ படம் வெளியாகிய 6 நாட்களுக்குள் வசூலை வாரிக்குவித்துள்ளது.
லியோ படத்தில், நடுத்தர வயது தந்தையாக தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய். குறிப்பாக படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருக்கும் இயலுடன் விஜய் அவ்வளவு க்யூட்டாக நடித்திருந்தார்.
இவ்வாறான நிலையில், இயலின் உண்மையான தந்தை நடிகர் அர்ஜுனன் விஜய் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
அதன்படி குறித்த பதிவில், 'விஜய் சார் நீங்கள் அவள் மீது காட்டிய அக்கறைக்கும், அன்புக்கும் நன்றி. லியோ படத்தின் மூலம் உங்களுடனான பல சிறப்பான தருணங்கள் இயலுக்கு உண்டு. அவள் உங்களை அதிகம் தொந்தரவு செய்திருக்கமாட்டாள் என நம்புகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
Listen News!