விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.இதில் கடந்த வாரம் மாடல் அழகி ஷெரினாவை நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.கடந்த வாரத்தில் நாமினேஷன் லிஸ்டில் சிக்கிய ஐந்து நபர்களில் ஷெரினா மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்று வெளியேறி உள்ளார்.
ஆனால் அதில் தான் தற்போது எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்துள்ளது. எப்போதுமே வெளியேறுபவர் யார் என்று கூறப்படும் அந்த எவிக்சன் கார்டில் போட்டியாளர்களின் பெயர் தமிழில் தான் இருக்கும். ஆனால் இந்த வாரம் ஷெரினாவின் பெயர் மலையாளத்தில் எழுதப்பட்டுள்ளது.இது பலருக்கும் ஷாக்கை ஏற்படுத்தி இருந்தது.பின் அவர் மலையாளத்தில் பேசியதால் தான் அவருக்கு அப்படி கமல் பாடம் புகட்டினார் என நெட்டிசன்கள் கூறி இருந்தார்கள்.
அத்தோடு இவர் ஒரு மாடல் என்பதை நாம் அறிவோம்.அதுமட்டுமின்றி சமுத்திரக்கனி இயக்கி, நடித்து வெளிவந்த விநோயத சித்தம் திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்திலும் நடித்திருந்தார்.
இவர் மொத்தம் 28 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்து இருந்து நிலையில் விஜய் டிவி 7 லட்சத்தை சம்பளமாக கொட்டிக் கொடுத்திருக்கிறது.
இவ்வாறுஇருக்கையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்த ஷெரினாவிற்கு தீபம் ஏற்றி கடும் வரவேற்ப்பு கொடுத்திருந்தார்கள் அவரின் குடும்பத்தார்.இந்த வீடியோவை அவர் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.இதோ அந்த வீடியோ
Listen News!