• Sep 21 2024

சட்டை ரூ.2 லட்சம்... வாட்ச் ரூ.2 கோடி -பிரபல நடிகரை பற்றி வெளியான தகவல்..வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ராம்சரண் ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு பின் தனது சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்திவிட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது அவரது வாட்ச் மற்றும் சட்டையின் விலை விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.


தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சிரஞ்சீவி. மேலும் இவரின் மகன் ராம்சரணும் தற்போது டோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.மேலும்  இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மிகப்பெரியளவில் வசூலை வாரிக்குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.மேலும் இப்படத்தை ராஜமவுலி இயக்கி இருந்தார்.



இதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ஆர்.சி.15 என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அத்தோடு இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். மேலும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் ராம்சரணுக்கு கடந்த 2012-ம் ஆண்டு உபாசனா என்கிற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்த இந்த ஜோடி, விரைவில் பெற்றோர் ஆக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் ராம்சரணின் மனைவி உபாசனா கர்ப்பமாகி உள்ளார். இதனால் இவர்களது குடும்பமே மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.



அத்தோடு ராம்சரண் ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு பின் தனது சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்திவிட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது அவரது வாட்ச் மற்றும் சட்டையின் விலை விவரங்கள் வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அதன்படி ராம்சரண் தனது நண்பர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் அவர் போட்டிருக்கும் வரிக்குதிரை டிசைன் சட்டையின் விலை கிட்டத்தட்ட ரூ.2 லட்சமாம்.



அதேபோல் நடிகர் ராம்சரண் வைத்திருக்கும் வாட்ச்சின் விலை கேட்டால் தலைசுற்றிவிடும். மேலும் அவர் அணிந்திருக்கும் Richard Mille என்கிற பிராண்டட் வாட்ச்சின் விலை ரூ.2 கோடியாம். இதையறிந்த வாயடைத்துப் போன நெட்டிசன்கள், அவரிடம் வேறென்ன காஸ்ட்லி பொருட்கள் உள்ளது என்பதை வலைவீசி தேடத் தொடங்கி உள்ளனர்.

Advertisement

Advertisement