இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிட்ம உதவி இயக்குநராக இருந்தவர் எம்.ராஜேஷ். பல வருடங்கள் அவரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஜீவா, அனுயா, சந்தானம், ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பில் 2009ஆம் ஆண்டு வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இசையாமித்திருந்தார்.மெகா ஹிட்டான எஸ்.எம்.எஸ்: ஜீவாவின் கேரியரில் மிக மிக முக்கிய படமாக சிவா மனசுல சக்தி படம் அமைந்தது.
பக்கா கமர்ஷியல் எண்ட்டெர்டெயினர் படமாக உருவாகியிருந்த அப்படத்தில் சந்தானத்தின் காமெடி, ஜீவாவின் நடிப்பு என அனைத்துமே பக்காவாக பொருந்தியது. குறிப்பாக அதில் ஜீவா பேசிய பல வசனங்கள் இன்றுவரை பலரது ஃபேவரைட். குறிப்பாக சிவா மனசுல சக்தி படத்தில் நடித்ததன் மூலம்தான் ஜீவா இளைஞர்களிடம் அதிகம் கனெக்ட் ஆனார்.
முதல் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஆர்யாவை வைத்து பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை இயக்கினார் ராஜேஷ். அந்தப் படத்தில் நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்திலும் காமெடி அதகளமாக ஒர்க் அவுட் செய்ய படம் மெகா ஹிட்டானது. இதனையடுத்து கோலிவுட்டில் முன்னணி இயக்குநர் பெயரை பெற்றார் ராஜேஷ்.
இந்நிலையில் சிவா மனசுல சக்தி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஜீவாவுடன் இன்னொரு படத்தில் தான் இணையவிருப்பதாகவும், அது சிவா மனசுல சக்தி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்காது எனவும் ராஜேஷ் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கமளித்திருக்கிறார்.
அதேபோல் அந்தப் பேட்டியில், ஜெயம் ரவியுடனான 30ஆவது படத்தின் படப்பிடிப்பு முடிச்சதும்தான் அடுத்த படத்திற்கான வேலைகள் தொடங்கும். நான் ஜீவாவிடம் பேசிவருவதுதான் 'எஸ்.எம்.எஸ் - 2' ஆக பரவியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
Listen News!