• Sep 21 2024

சிவாஜி எழுதியதாக சொல்லப்படும் உயில் பொய்யானது-சொத்து வழக்கில் நீடிக்கும் மர்மங்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், அவருக்கு சொந்தமான 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் அவரது மகள்களான சாந்தி, ராஜ்வி இருவரும் வழக்குக் தொடுத்திருந்தனர்.

அனைத்து சொத்துக்களிலும் சமபங்கு உள்ளதாக கூறி ராம்குமார், தங்களிடமும் பிரபுவிடமும் 2013ல் பொது அதிகார பத்திரத்தை எழுதிப் பெற்றதாக தெரிவித்தார். 1999ல் எழுதப்பட்ட பதிவு செய்யப்படாத நடிகர் சிவாஜியின் உயில் 2021ல் தான் வெளிவந்தது எனவும், அதில் தங்களுக்கு சொத்தில் உரிமையில்லை என கூறப்பட்டுள்ளதாகவும், உயிலை மெய்ப்பித்து சான்று கோரிய வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.

கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட இந்த சொத்து விவகாரம் இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அதில் நடிகர் சிவாஜி கணேசன் எழுதியதாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது எனவும், உயில் சட்டபடி மெய்ப்பித்து சான்று பெறாததால் அது செல்லத்தக்கதல்ல என்றும் சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில் வாதிடப்பட்டது.

பாகப் பிரிவினை கோரி கடந்த 2021ம் ஆண்டு அனுப்பிய நோட்டீசுக்கு அளித்த பதிலில் தான், 1999ம் ஆண்டு சிவாஜி கணேசன் உயில் எழுதி வைத்துள்ளதாக முதல் முறையாக தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. சாந்தி தியேட்டரில் இருந்த தந்தை சிவாஜியின் 50 சதவீதம் பங்குகளும், தாய் கமலாவின் 50 சதவீதம் பங்குகளும் முறைகேடாக ராம்குமார் மற்றும் பிரபுவின் மகன்களின் பெயருக்கு மாற்றப்பட்டதாகவும் கூறினார்.

வழக்கில் சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பு வாதங்கள் முடிவடையாததால் விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சிவாஜி குடும்ப சொத்து விவகாரம் தீவிரமடைந்து வருவதால் கோலிவுட்டே பரபரப்பாகி உள்ளது. வழக்கில் அடுத்து என்ன நடக்கும், கோர்ட் இந்த விவகாரத்தில் எந்த மாதிரி முடிவெடுக்கும்,சிவாஜி எழுதியதாக சொல்லப்படும் உயில் போலியானது என்றால் உண்மையான உயில் எங்குள்ளது, பிரபு மற்றம் ராம்குமார் மீது அவரது சகோதரிகள் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் உண்மைதானா என பல கேள்விகள் அடுக்கடுக்காக எழுந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement