சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கின்றது. அதாவது சூப்பர் சிங்கரில் போட்டியாளராக களம் இறங்கிய பூஜா ,இந்த வார இறுதியில் பாடுவதற்காக மேடைக்கு தமது குடும்பத்தினருடன் வந்து நின்றார்.
எந்த நிகழ்ச்சி சென்றாலும் நடுவே வசனங்கள், பாடல்கள் என்பவற்றை ஒளிபரப்பு செய்து அனைவரையும் கவர்ந்து வருகின்ற DJ பிளாக், பூஜா பாட வந்தபோது பாடல்களையும் ரொமான்டிக் வசனங்களையும் தட்டி விட்டார். ஆனால் இம்முறை பூஜாவின் குடும்பத்தினர், “ஏன் பூஜாவுக்கு மட்டும் இப்படி பாடல் போடுகிறீர்கள்? மிகவும் மனவருத்தமாக இருக்கிறது. இந்த வருத்தத்தை சொல்லாமல் மனதிற்குள்ளேயே வைத்திருப்பது தேவையில்லை” என்று குறிப்பிட்டு அவரை சாடி இருக்கின்றனர்.
இருப்பினும் நேற்றைய எபிசோட்டின் வாயிலாக இது ஒரு பிராங்க் என்பது தெரிய வந்தது. இவ்வாறு ஒரு பக்கம் இது பிராங் என்று பலர் சொன்னாலும் மறுபக்கம் DJ பிளாக்கை பலரும் திட்டிய வண்ணம் தான் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் தற்போது சிவாங்கி DJ பிளாக்கிற்கு ஆதரவாக பேசி கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அதாவது "நான் சூப்பர் சிங்கரில் பாட்டுப் பாடிக் கொண்டிருக்கும் போது, எனக்கு DJ என்ன எல்லாம் பண்ணினாரோ அதே விஷயத்தை தான் இப்போ பூஜா விஷயத்திலும் நடந்திருக்கு. பூஜாவோட பமிலி அதை ஸ்போர்டிவ் ஆகவும், ஜாலியாகவும் எடுத்துக் கிட்டாங்க. அதனால் சீரியஸ் ஆகல. ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லுறன் சூப்பர் சிங்கரில் DJ எல்லாருக்கும் தான் மியூசிக் போடுவார், அவர் பொண்ணுங்களுக்கு மட்டும் தான் மியூசிக் போடுறார் என்று அவர் பற்றி ஒரு தப்பான விஷயத்தைப் பரப்பி விடாதீங்க.
அப்பிடி DJ தப்பாக நடந்திருந்தால் அதை அவங்க டிவியில் டெலிகிராஸ் பண்ண மாட்டாங்க. அதை முதலில புரிஞ்சுக்கோங்க. எனவே தயவு செய்து DJ பற்றி தப்பாக பேசாதீங்க. அவர் பூஜாக்கு மட்டுமில்லை, இதற்கு முதல் நடந்த எல்லா சீசனிலும் எந்த ஒரு போட்டியாளர் பாட வந்தாலும் அவர் மியூசிக் போட்டு அவரோட வேலையை பார்த்திட்டு இருக்காரு. பூஜா பமிலி இதை ஸ்போர்டிவ் ஆக எடுத்துக் கொண்ட மாதிரி நீங்களும் அதை ஸ்போர்டிவாக எடுத்துக் கொள்ளுங்கள்" எனவும் DJ பிளாக்கிற்கு ஆதரவாக கூறியுள்ளார்.
Listen News!