• Nov 19 2024

ஒண்ணுமே தெரியாத இவர் எப்படி முதல் பைனலிஸ்ட் ஆனார்..? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த சிவாங்கி ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ஷோக்களில் ஒன்று 'குக்வித் கோமாளி'. இந்நிகழ்ச்சியானது ஒரு சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் நகைச்சுவை நிறைந்ததாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியானது 3சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 4ஆவது சீசன் அட்டகாசமாக ஒளிபரப்பாகி வருகின்றது.


அந்தவகையில் ஒவ்வொரு வரவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் முதல் பைனலிஸட் ஆக சிவாங்கி தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை முன் வைக்க தொடங்கி விட்டனர். அதாவது கோமாளியாக இருந்த சிவாங்கிக்கு காய், கரி கூட வெட்டத் தெரியாது, அவங்களுக்கு மாமிசம் சமைக்க வராது, அவங்க எப்படி பைனலிஸ்ட் ஆனாங்க" என தங்களது விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். 


இதற்கு சிவாங்கி ரசிகர்கள் பதிலளித்து வருகின்றனர். அதாவது "அவங்க கொஞ்சம் கொஞ்சமாக சமையல் கத்துக்கிட்டாங்க, குக்வித் கோமாளி சீசன் ஆரம்பத்தில் இருந்தே சிவாங்கி மேல் நிறைய குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன. எல்லாத் தடைகளையும் தாண்டி இன்று அவர் சமையலில் சாதித்து இருக்கின்றார். அதனால் இப்படியான நெகடிவ் விமர்சனங்களை முன் வைக்காதீர்கள்" எனப் பதிலளித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement