• Sep 20 2024

ஷிவானி நாராயணன் - ஜிபி முத்து நடித்துள்ள படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் -ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஸ்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

'விக்ரம்' படத்தை தொடர்ந்து, ஷிவானி நாராயணன் முதல் முறையாக ஹீரோயினாக நடிக்க உள்ள படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.

 கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட 'பம்பர்' என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கின்றார். நாயகியாக ஷிவானி நாராயணன் நடிக்கிறார். வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன், ‘கொம்பன்’ மற்றும் சமீபத்தில் வெளியான 'விருமன்' புகழ் முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய எம். செல்வக்குமார் இயக்குகிறார். 

மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 31 விநாயக சதுர்த்தி தினத்தன்று வெளியாகின்றது. பம்பர் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

 இப்பணிகளும் விரைவில் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்றும் படத்தின் வெளியீடு குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படுமென்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார். 



 தூத்துக்குடி, திருவனந்தபுரம், புனலூர் மற்றும் சபரிமலை உள்ளிட்ட பகுதிகளில் பம்பர் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் மிகவும் சுவாரசியமான முறையில் தயாராகி உள்ளது என்று குழுவினர் தெரிவிக்கின்றனர். சுவாரசியமான கதாபாத்திரத்தில் விஜய் டிவி தங்கதுரை நடிக்க, துப்பாக்கி பாண்டியன் எனும் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் டிக் டாக்  ஜி பி முத்து நடித்துள்ளார். 

'பம்பர்' படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றுகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெருவழிப்பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள அரசின் உரிய அனுமதியுடன் நடந்துள்ளது. படத்தை பற்றி பேசிய இயக்குநர் செல்வக்குமார், “கேரள பம்பர் லாட்டரி தான் இப்படத்தின் கதைக்களமாகும். வெற்றி கதாநாயகனாகவும், அதற்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் பேரடியும் நடிக்கின்றனர்,” என்றார்.மேலும் இப் படத்தின் ஒளிப்பதிவை 'நெடுநல்வாடை', 'எம்ஜிஆர் மகன்', 'ஆலம்பனா' மற்றும் 'கடமையை செய்' ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி கையாள்கிறார். மு.காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement