விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 4 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் ஷிவானி நாராயணன். இவர் இதற்கு முதல் பகல் நிலவுஇ இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்திருக்கின்றார்.
இருப்பினும் பிக்பாஸை விட்டு வெளியேறியதும் இவருக்கு படவாய்ப்புகள் குவிந்துள்ளது. அதன்படி, தற்போது பிரமாண்டமாக உருவாகி இருக்கும் கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும், வடிவேலு நடித்து வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது தவிர சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் ஷிவானி நாராயணன் சேலை, மாடல் உடை என எந்த உடை அணிந்தாலும் அதனுடன் புகைப்படம் வெளியிட்டிடுவார்.
அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடை அணிந்து சிறிது கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!