தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்பொழுது இயக்குநர் கௌதம் மேனனுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளரான ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் முத்து என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருக்கிறார்
வரும் செப்டம்பர் 15ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.சிம்பு கொரோனா காலகட்டத்தை சரியாக பயன்படுத்தி தனது உடல் எடையை குறைத்து புதிய ஆளாக மாறினார். இந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார்.
இப்படத்திற்காக மட்டும் அவர் 23 கிலோ உடல் எடையை சிம்பு குறைத்துள்ளதாக நேற்று (செப்டம்பர் 2) நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியுள்ளார். இதைக் கேட்ட அவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!