விஜய் கடந்த சில மாதங்களாக லியோ படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகின்றார். ஆனாலும் இவரது படம் குறித்த தகவலை விட சமீபகாலமாக இவர் குறித்த தகவலே அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
அதிலும் குறிப்பாக விஜய்-கீர்த்தி சுரேஷ் கிசுகிசு பெரியளவில் வைரலானது. இவை அனைத்தும் கிசுகிசு மட்டுமே என்று சொன்னாலும் சிலர் வேண்டுமென்றே இதை பற்றி பேசி பெரிதாக்கி வருகின்றனர்.
இவ்வாறாக விஜய்யின் சினிமா, கிசுகிசு ஒரு பக்கம் இருந்தாலும் அரசியல் தொடர்பாக பல வேலைகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் விஜய்க்கு பின்புலமாக இருந்து வருபவர் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தான் என்று பிரபல விமர்சகர் கோடாங்கி சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அப்பேட்டியில் விஜய் குறித்த பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார். அதாவது "ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தான் விஜய் எப்படி காய் நகர்த்தினால் என்னென்ன பலன் என்று பலவிதமான கருத்துக்களை ஆலோசனை கொடுத்து வருகிறார்" என்றார்.
அத்தோடு "விஜய் தன் ரசிகர்களை நிர்வாகிகளாக்கி இப்போதில் இருந்தே செதுக்கி வருகிறார். அதைவிட விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் அரசியல் பற்றி விஜய்யிடம் யாரையும் பேசக்கூடாது என்று யாரையும் அனுமதிப்பதில்லை, ஏன் அவரது குடும்பத்தினர் கூட அவரிடம் அரசியல் பற்றி பேசவிடவில்லையாம்" என்றார்.
அதுமட்டுமல்லாது "விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்-ஆல் கூட அரசியல் நிலைப்பாடுகள் குறித்து எதுவும் கேட்கமுடிவதில்லையாம். அந்த அளவிற்கு புஸ்ஸி ஆனந்த் கட்டுப்பாட்டில் விஜய்யின் நிலைபாட்டு கட்டுக்கோப்பாக இருந்து வருகிறது" என கோடாங்கி தெரிவித்துள்ளார்.
Listen News!