• Nov 19 2024

"எங்களுக்காக நிர்வாணமாக நடியுங்கள்"..ரன்வீரிடம் கோரிக்கை விடுத்த முக்கிய அமைப்பு…கிளம்பும் எதிர்ப்புகள்.!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் ரன்வீர் சிங். இவர் 2010-ஆம் ஆண்டில் வெளியான 'பேண்ட் சர்மா பாராத்' என்ற படத்தின் மூலமாக பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து தனது நடிப்பினை திறமையாகவும், சிறப்பாகவும் வெளிப்படுத்தி வந்தார்.

இவர் நடிப்பில் மட்டுமல்ல பெண்களைப் போன்று வித்தியாசமாகவும், விதம் விதமாகவும் உடை அணிவதற்கு பெயர் போன ஒருவராகவும் விளங்கி வருகின்றார். பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் பிறந்தமேனியாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை எடுத்திருக்கின்றார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய நிலையில் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்புகைப்படத்தை பார்த்த ரன்வீரின் ரசிகர்கள் உட்பட சமூக வலைதளவாசிகள் பலரும் அவரை கண்டமேனிக்கு கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். அதுமட்டுமல்லாது நிர்வாணமாக போஸ் கொடுத்ததன் மூலம் பெண்களின் உணர்வுகளை மிக மோசமான வகையில் காயப்படுத்தி விட்டார் என்று ரன்வீர் சிங் மீது மும்பை காவல் நிலையத்தில் புகார் ஒன்றும் அளிக்கப்பட்டது. அது தொடர்பான போலீஸ் விசாரணைகளும் இடம் பெற்றிருந்தன.

இவ்வாறாக ரன்வீருக்கு எதிராகப் பலரும் கிண்டல் செய்தும், புகார் அளித்தும் கொண்டிருக்கும் நிலையில் இவர் நிர்வாணமாக போஸ் கொடுத்ததற்கு பாலிவுட் நடிகைகள் பலரும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல பதிவுகளையும், வீடியோக்களையும் பகிர்ந்திருந்தனர். அதிலும் குறிப்பாக ராக்கி சவுந்த் "ரன்வீரை இப்படி ஆடையில்லாமல் பார்க்கத் தான் விரும்புகிறார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியாவின் முக்கியமான அமைப்பு ஒன்றும் இவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது. அதாவது 'பீட்டா' இந்தியா அமைப்பு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இவ்வமைப்பானது தங்கள் அமைப்புக்காக நிர்வாணமாக போஸ் கொடுக்குமாறும் ரன்வீர் சிங்கை கேட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பீட்டாவின் அழைப்பை ஏற்று ரன்வீர் சிங் மறுபடியும் பிறந்த மேனியாக போஸ் கொடுப்பார் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றார்கள். அதுமட்டுமன்றி இவ்வமைக்கு எதிராக சிலர் கண்டனங்களைத் தெரிவித்தும் வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement